உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திருப்பதிக்கு தனி மாநில அந்தஸ்தா; மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்

திருப்பதிக்கு தனி மாநில அந்தஸ்தா; மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 30 லட்சம் மக்கள் மட்டுமே வாழும் திருப்பதிக்கு எப்படி தனிமாநில அந்தஸ்து வழங்க முடியும்? என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பி உள்ளனர்.ஆந்திராவின் திருப்பதியில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் வழங்கும் லட்டு தயாரிப்பில், விலங்கு கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்டதாக, ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு சமீபத்தில் குற்றம் சாட்டினார். ஆய்விலும் லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு பொதுநல மனுக்கள் தொடரப்பட்டன.அந்த வகையில், தேவஸ்தானம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பால் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். மனுவில், 'திருப்பதி லட்டு விவகாரத்தில் ஆந்திரா அரசு, திருப்பதி தேவஸ்தானம் மற்றும் சி.பி.ஐ., மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பதிக்கு தனிமாநில அந்தஸ்து வழங்க வேண்டும்' என கூறியிருந்தார்.இந்த மனு இன்று (நவ.,08) நீதிபதி கவாய் தலைமையான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: கோவிலுக்கு நாங்கள் எப்படி தனிமாநில அந்தஸ்து கொடுக்க உத்தரவிட முடியும்? ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு தனி மாநிலம் உருவாக்க வேண்டும் என நாங்கள் கூற முடியாது.30 லட்சம் மக்கள் மட்டுமே வாழும் திருப்பதிக்கு எப்படி தனிமாநில அந்தஸ்து வழங்க முடியும்? இது போன்ற மனுக்களை எப்படி விசாரிக்க முடியும்? இவ்வாறு நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர். இதையடுத்து, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

K Raveendiran Nair
நவ 08, 2024 20:56

இவரையெல்லாம் ஆறு வருஷம் ஜெயில்ல வைக்கணும் அப்பத்தான் புத்தி வரும்


Subash BV
நவ 08, 2024 18:51

Whats wrong. Only hindu temples contributing to the government. Why not tirupati a seperate state, where Hindus can pray their god independently without the interference of converted guys. ANYWAY DONT HAVE GUTS TO DECLARE THIS AS A HINDU NATION. DO ATLEAST THIS. BECAUSE ONLY HINDU TEMPLES PAYING TO THE GOVERNMENT IN THIS SECULAR NATION. HINDUS WAKE UP.


என்றும் இந்தியன்
நவ 08, 2024 16:37

கிறித்துவ பால் உனக்கு எதற்கு திருப்பதி குறித்து மனு???உன்னுடைய சர்ச் பாதிரியார் டுபுக்குகளை பற்றி மனு கொடு, சரியா. கிருத்துவன் / முஸ்லீம் அவர்கள் சர்ச்/மாஸ்க், பாதிரியார்/ இமாம் செய்யும் நடக்கும் அலங்கோலங்களைப்பற்றி கவலைப்படுங்கள் அதைத்திருத்தும் வழியை பாருங்கள்


SUBRAMANIAN P
நவ 08, 2024 16:37

மனுவை தள்ளுபடி மட்டும் செய்திருக்கக்கூடாது. மனுப்போட்டவனை கூப்பிட்டு மண்டையில நறுக்கு நறுக்கு குட்டி அனுப்பிருக்கணும். பைன் போட்டிருக்கணும். சுப்ரீம் கோர்ட்டுல வேலையில்லாம இருக்காங்கன்னு நெனச்சிட்டான் போல. வேலை வெட்டி இல்லாதவன் போல.


Sampath Kumar
நவ 08, 2024 14:50

ஹிந்தி மாநிலம் ஹிந்தி இல்லாத மாநிலம் என்று பிரித்துக் கொடுங்கள் யுவர் ஹானர் ரோம்ப பிரச்சனைகள் முடிவுக்கு வரும்


Saai Sundharamurthy AVK
நவ 08, 2024 14:18

பெயரிலேயே தெரிகிறது மனுதாரர் ஒரு கிறிஸ்துவர் மற்றும் கிறிஸ்துவ மிசினரியை சார்ந்தவர் என்று!!! ஜெகன் மோகன் ரெட்டியை முதல்வராக்கி கொள்ளையடித்தனர். இப்போது சந்திரபாபு நாயுடு முதல்வராகி திருமலையை சீரமைத்து வருகிறார். ஒரு இந்து முதல்வராக இருக்கும் வரை கொள்ளையடிக்க முடியாது மற்றும் இந்து மதத்தை சீரழிக்க முடியாது என்று தெரிந்து விட்டது போலும்! ஆகவே தான் தனி மாநிலமாக்கி திருப்பதியை கிருத்துவ தேவாலயமாக மாற்றி விடலாம் என்கிற ஈன புத்தி தான் அவர்களின் கண் முன்னே நிற்கிறது.


Indian
நவ 08, 2024 16:21

உன் கருத்து வாசிக்கும் பொது ரொம்ப ஈனத்தனமா தெரியுது ??


Ramesh Sargam
நவ 08, 2024 14:01

இதுபோன்று கிறுக்குத்தனமாக கோரிக்கைகளை வைக்கும் மக்களை, அரசியல்வாதிகளை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்து, தண்டிக்கவேண்டும். நீதிமன்ற நேரம் வீணடிப்பு இதுபோன்ற மனுக்களை விசாரிப்பதில்.


புதிய வீடியோ