உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சரிந்தது சரத் பவார் செல்வாக்கு: கண்ணீர் வரவழைத்த கடைசி தேர்தல்!

சரிந்தது சரத் பவார் செல்வாக்கு: கண்ணீர் வரவழைத்த கடைசி தேர்தல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மஹாராஷ்டிரா அரசியலில் 6 தசாப்தங்களாக இருக்கும் சரத்பவாருக்கு இந்த தேர்தல் அதிர்ச்சியை கொடுத்து உள்ளது. முன் எப்போதும் இல்லாத வகையில் அவரது கட்சி இந்த முறை குறைந்த ஓட்டுக்கள் மட்டுமே கிடைத்து உள்ளது.தற்போது 83 வயதாகும் சரத்பவார், இந்த தேர்தல் தான் தனக்கு கடைசித் தேர்தல் என பிரசாரத்தின் போது உருக்கமாக பேசினார். கட்சியில் முக்கியமான பொறுப்பு வழங்கிய போதிலும், அவரது அண்ணன் மகனான அஜித் பவார் கட்சியை உடைத்தார். இதனால் மனம் உடைந்த அவருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் லோக்சபா தேர்தலில் அஜித்பவார் தரப்பை விட அதிக தொகுதிகள் கிடைத்தன. இருப்பினும் இந்த சட்டசபை தேர்தல் சரத்பவாருக்கு முக்கியமானதாக இருந்தது. இதன் மூலம் தனது செல்வாக்கை நிரூபக்க வேண்டும் என திட்டமிட்டு இருந்தார். இதற்காக வயதை பொருட்படுத்தாமல் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். காங்கிரஸ் கூட்டணியில், சரத்பவார் கட்சி 89 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால், ஓட்டு எண்ணிக்கையில் சரத்பவாருக்கு எதிர்பாராத விதமான முடிவுகளே கிடைத்தன. 2 மணி நிலவரப்படி அவரது கட்சி 13 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. 14.94 சதவீத ஓட்டுகள் மட்டுமே கிடைத்து உள்ளது. சரத்பவாரின் அரசியல் வரலாற்றில் இவ்வளவு குறைந்தளவு கிடைத்தது இதுவே முதல்முறையாகும்.ஆனால், இதற்கு மாறாக, அஜித் பவார் கட்சி 39 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Venuviswanathan
டிச 01, 2024 07:21

மகாராஷ்டிர மாநில அரசியல் மிகவும் வித்தியாசமாகவும், மிக நன்றாகவும் எச்சரிக்கை உணர்வுடனும் மிகவும் பொறுமையுடன் கவனமாக பிற மாநிலங்கள் உன்னிப்பாக கவனிக்கும் விதத்தில் சென்றுகொண்டுள்ளது. வாழ்த்துகள்...


karthik
நவ 30, 2024 10:54

விரைவில் இங்குள்ள திராவிட கட்சிகளுக்கும் மூடுவிழா நடக்கும்


Lucky Srinivasan
நவ 25, 2024 12:08

இதுவும் ஒரு குடும்பக் கட்சி. இவர் ஓய்வு பெற்றால், இவர் மகள் சுப்ரியா சூலே யிடம் கட்சி ஒப்படைக்கப் படும். பெரும்பாலான மாநிலக் கட்சிகளின் நிலை இதுதான்.


rasaa
நவ 24, 2024 11:45

அகத்தின் அழகு முகத்தில்.செய்த பாவத்தின் அழகும் முகத்தில்


Revathi
நவ 28, 2024 13:50

Really good ?


V GOPALAN
நவ 24, 2024 06:56

பவார் பவர் முடிந்தது அவர் தஎன்னுடைய இறுதி கட்டத்தை அமைதியாக நடத்திக்கொள்வதே மேல்


Ramesh Sargam
நவ 23, 2024 20:17

சில நாட்களுக்கு முன்பு பவார் அரசியலுக்கு முழுக்குபோடுவார் என்று செய்தி படித்தேன். அப்பவே அந்த வேலையை செய்திருக்கவேண்டும். இப்ப பாருங்கள் மகா மோசமான தேர்தல் தோல்வியுடன் முழுக்கு போடப்போகிறார்? இப்பவாவது போடுவாரா?


Perumal Pillai
நவ 23, 2024 18:45

தயைசெய்து இவன் படத்தை காட்டாதீர்கள் .


Bhaskaran
நவ 23, 2024 17:36

எழுபதுகளில் தினமலர் மராட்டிய அரசியல் தேர்தல் சரத்பவார் பற்றி விரிவாக வந்த செய்திகளைப் படித்தால் பவார் தாத்தாவின்ஆரம்ப அரசியல் பற்றி நன்கு தெரியலாம்


Bhaskaran
நவ 23, 2024 17:34

இந்த முறை தாத்தாவை விட பாட்டிக்கு அஜீத்மவார் மேல் கடும் கோபம் அஜீத்தே எப்படியாவது அரசியலில் இருந்து ஒழித்துக்கட்ட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு ரத கஜ துரக படைகளை இறக்கி பணத்தை அள்ளி வீசி மும்முரமாக களத்தில் நேரடியாக இறங்கி வேலை செய்தாராம்.பாட்டிக்கு பாராமதி மக்களின் அன்பு பரிசு தோல்வி


hariharan
நவ 23, 2024 16:56

ஓய்வு எடு, உனக்கு ஒரு கும்பிடு, உன் கட்சிக்கு ஒரு கும்பிடு. கட்டுமரம் இத்துப்போச்சு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை