உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கணுமா? உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் காட்டம்

 ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கணுமா? உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் காட்டம்

: ''நம் நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு அசாதாரணமான பாதுகாப்பு வழங்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா? அவர்களுக்காக சிவப்பு கம்பளம் விரிக்க வேண்டுமா?'' என, உச்ச நீதிமன்றம் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பி உள்ளது. அண்டை நாடான மியான்மரில் இருந்து சட்டவிரோதமாக நம் நாட்டிற்குள் நுழைந்த ரோஹிங்யா முஸ்லிம்களை வெளியேற்றுவதா அல்லது நாட்டிற்குள் இருக்க அனுமதி அளிப்பதா என்ற விவாதம் சூடுபிடித்து இருக்கிறது. அச்சுறுத்தல் ஐ.நா.,வின் அகதிகள் பாதுகாப்பு உடன்பாட்டில், நம் நாடு கையெழுத்திடவில்லை. எனவே, ரோஹிங்யாக்களை சட்டவிரோத குடியேறிகள் என மத்திய அரசு வகைப் படுத்தி இருக்கிறது. - டில்லி சிறப்பு நிருபர் - அதே சமயம் மனித உரிமை அமைப்புகள் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றன. நம் நாட்டில் இருந்து அவர்களை வெளியேற்றக் கூடாது எனவும் கோரி வருகின்றன. வங்கதேசம் எல்லை வழியாக நம் நாட்டின் மேற்கு வங்கம், திரிபுரா, அசாம் மாநிலங்களுக்குள் ரோஹிங்யாக்கள் சட்டவிரோதமாக குடியேறி வருகின்றனர். அவர்களில் பலர் ஆதார் அடையாள அட்டைகளை மோசடியாக பெற்று வரும் தகவலும் சமீபத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், சட்டவிரோதமாக குடியேறிய ரோஹிங்யாக்களில் பலருக்கு பிரிவினைவாத கும்பலுடன் தொடர்பு இருப்பதாக உளவுத் துறை எச்சரித்துள்ளது. இதனால், நம் நாட்டின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் எழுந்துள்ளது. இந்நிலையில், அகதிகள் முகாமில் இருந்து தப்பிய ரோஹிங்யா முஸ்லிம்கள் பற்றி எந்த தகவலும் இல்லாததால், அவர்களை கண்டுபிடிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் ஆட் கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. கேள்வி தலைமை நீதிபதி சூர்ய காந்த் முன்பாக இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் காட்டமாக எழுப்பிய கேள்விகள்: சட்டவிரோதமாக நம் நாட்டிற்குள் நுழையும் ரோஹிங்யாக்கள், உணவு, உறைவிடம் என்ற உரிமைகளை தற்போது கேட்க ஆரம்பித்துவிட்டனர். நம் நாட்டில் உள்ள ஏழை குழந்தைகளுக்கு இந்த சலுகைகள் இல்லையா? அவர்களுக்கு அந்த சலுகைகள் கிடைக்க சட்டரீதியாக போராட்டம் நடத்தியிருக்கிறீர்களா? வட மாநிலங்களில் உள்ள எல்லைகள் வழியாக ஊடுருவல்காரர்கள் மிக எளிதாக நம் நாட்டிற்குள் நுழைந்து விடுகின்றனர். அவர்களை இங்கேயே வைத்திருக்க அனுமதி கோருவது நியாயமா? இது தேச பாதுகாப்புக்கான பிரச்னையாக தெரியவில்லையா? சட்டவிரோதமாக குடியேறிய ரோஹிங்யாக்களுக்காக நாம் சிவப்பு கம்பளம் விரித்து, அசாதாரணமான பாதுகாப்பு வழங்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா? இவ்வாறு நீதிபதி சூர்ய காந்த் கேள்வி எழுப்பினார். அப்போது குறுக்கிட்ட மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ''ரோஹிங்யாக்களுக்காக பொது நல மனு தாக்கல் செய்தவர்கள், இதுவரை அவர்களுக்காக எந்த நன்மையும் செய்யாதவர்கள். ''இப்படியொரு மனுவை தாக்கல் செய்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. எனவே, இம்மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்,'' என வாதிட்டார். இதை குறித்துக் கொண்ட தலைமை நீதிபதி சூர்ய காந்த், இவ்வழக்கின் அடுத்த விசாரணையை வரும் 16ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ