உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இது வேற லெவல்ங்க... இந்தியாவில் முதன்முறையாக ரயிலில் ஏ.டி.எம்.,: சோதனை சக்சஸ்

இது வேற லெவல்ங்க... இந்தியாவில் முதன்முறையாக ரயிலில் ஏ.டி.எம்.,: சோதனை சக்சஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: நாசிக் அருகே உள்ள மன்மாட் முதல் மும்பை வரை இயக்கப்படும் பஞ்சவாடி எக்ஸ்பிரஸ் ரயிலில் இந்தியாவின் முதல் முறையாக ஏ.டி.எம்., இயந்திரம் அமைக்கப் பட்டுள்ளது. இந்த ஏ.டி.எம்., இயந்திரத்தில் பணம் எடுத்து ரயில்வே அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை வெற்றி அடைந்தது.ஏ.டி.எம்., இயந்திரம் ரயில் நிலையம், பஸ் நிலையம் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அமைக்கப்பட்டு இருக்கும். தற்போது முதல் முறையாக, மத்திய ரயில்வே மும்பை-மன்மத் பஞ்சவடி எக்ஸ்பிரஸ் ரயிலில் குளிர்சாதனை பெட்டியில் ஏ.டி.எம் இயந்திரத்தை நிறுவியுள்ளது. இந்த ஏ.டி.எம்., இயந்திரத்தில் பணம் எடுத்து சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனை முயற்சி வெற்றி அடைந்தது.பெட்டியின் பின்புறத்தில், ஏற்கனவே தற்காலிக சரக்கு அறையாகப் பயன்படுத்தப்பட்ட இடத்தில் ஏ.டி.எம்., அமைக்கப்பட்டுள்ளது. ரயிலின் 22 பெட்டிகளும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டு இருப்பதால் ஏ.டி.எம்., இயந்திரத்தை மக்கள் எளிதில் அணுக முடியும். இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: சோதனை வெற்றிகரமாக நடந்தது. சில இடங்களில் மட்டும் சிக்னல் பிரச்னை இருந்தது. இனி மக்கள் ஓடும் ரயிலில் பணம் எடுக்க முடியும். ஏ.டி.எம்., இயந்திரத்தின் செயல்பாட்டை தொடர்ந்து கண்காணிப்போம், என்றனர்.இது குறித்து பயணிகள் கூறியதாவது: இது ஒரு நல்ல முயற்சி. அவசர தேவைக்கு பணம் எடுக்க இது மிகவும் உதவியாக இருக்கும், என்றனர். இந்த எக்ஸ்பிரஸ் ரயில் செல்லும் ரூட் மிகவும் பிரபலமானது. தினமும் ஏராளமான மக்கள் இந்த ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

பல்லவி
ஏப் 17, 2025 06:29

ATM எண்ணிக்கையை குறைத்த நிலையில் மீண்டும் உபயோகிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது எனவே இரயில் பயணத்தை எளிதாக்க உதவும்


Ray
ஏப் 16, 2025 20:27

ATM வண்டவாளங்களை சொல்ல வேண்டுமென்றால் கம்ப ராமாயணம் ஆகிடும். ஆட்டோமேட்டிக் டெல்லர் மெஷின்னாங்க. நாம் அது எனி டைம் மணி என்று மகிழ்ந்தோம். புற்றீசல் போல தெருவுத்தெரு கொண்டுவந்து வச்சு நல்ல காசு பாத்திருப்பாங்க. வர வர மாமியார் கழுதைபோல் ஆனார்ன்னு எவனோ எப்போதோ சொல்லி வச்சதை உண்மைன்னு நிரூபிச்சது. சொல்லொணா குளறுபடிகள் கல்லைக் கண்டா நாயக் காணோம்ங்கிற கதையா மெஷின் வேலை செய்யாது வேலை செய்தாலும் பணம் வராதுங்கற நிலை. இதையெல்லாம் கண்டுக்கவே யாரும் இல்லை. இந்த கூத்தில் பணமெடுக்க கட்டணம் வைத்தாங்க மாசம் மூணு தடவைதான் பணம் எடுக்கலாம். அதுவும் வெளி வங்கி ATM னா ரெண்டுதரம்தான்னு கண்டிஷன் போடத்தான் அரசாங்கம் இருந்தது. போன மாதத்தில் மூன்று ATM அலைந்து பணம் எடுக்க வேண்டியாகி விட்டது. காசிக்கு போன என் தம்பி மனைவி அங்கிருந்து திரும்பிவர ரயிலில் ஏறும்போதே கூட்ட நெரிசலில் சிக்கி இறந்து போனாள்னு போலீஸ் செய்தி சொன்னாங்க. தம்பி மகனை விமானத்தில் அனுப்பும் போது கையில் கொஞ்சம் பணம் தருவதற்காக அலைந்தோம். அங்கே போய் ATM மை தேட முடியுமா? அல்லது எல்லாத்துக்கும் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்ய முடியுமா? இந்த நிலை திருவாளர் பொது ஜனத்துக்குத்தான். கொள்ளையர்களுக்கோ ATM ஆப்த சிநேகிதனா அள்ளி அள்ளி கொடுக்கிறது. கொள்ளையர்களுக்கு PREFERRED ATM SBI ATM தான். துனியா கோ மார் கரே தோ துனியா நே ஸலாம் கர்த்தா ஹை.


TRE
ஏப் 16, 2025 18:59

பிஜேபி ரயில்வேயை புகழற்றனா அந்த திட்டம் சீக்கிரம் மூடிருவான் இல்ல ATM ஐ வடக்கன் ரயில்பெட்டியோட தூக்கிட்டு போயிடுவான்


Ramesh Sargam
ஏப் 16, 2025 18:35

இந்திய ரயில்களில் டாய்லெட்டில் வைக்கப்பட்டிருக்கும் சிறிய சிறிய மக்குகளையே திருடுகிறார்கள். இந்த ஏடிஎம் இயந்திரத்தை திருடமாட்டார்களா...?


Yasararafath
ஏப் 16, 2025 17:58

ஏ.டி.எம் வசதி இல்லாதவர்கள் அவர்களுக்கு இது எப்படி உதவும்.?


பல்லவி
ஏப் 16, 2025 17:32

சோதனை அடிப்படையில் சாதனை படைத்த வங்கி களுக்கு வாழ்த்துக்கள்


Pallava Rajan
ஏப் 16, 2025 17:04

all the payments are now being done digitally in phone how it is going be helpful for passengers, still not a bad idea


Ray
ஏப் 17, 2025 05:42

இன்னும் தட்டில் கரன்சிகளைதான் போடுகிறோம். அறநிலையத்துறை பட்டார்ச்சார்யாளுக்கு POS கொடுக்கணும்.


Ray
ஏப் 18, 2025 07:28

சாரி POS அல்ல பே டிம் Paytim


Senthilkumar Ganesan
ஏப் 16, 2025 16:53

வடக்கன்கள் கொள்ளையடிக்க ரொம்ப வசதியா இருக்கும்


A.C.VALLIAPPAN
ஏப் 16, 2025 16:41

ask tamil nadu government they will give 1000 then they will take your property you can keep close your navathuvaram


KRISHNAN R
ஏப் 16, 2025 16:32

Network issue .. வரலாம்


முக்கிய வீடியோ