உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் சுப்ரீம் கோர்ட் கண்டனம்!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் சுப்ரீம் கோர்ட் கண்டனம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளில் விசாரணையை இழுத்தடிக்க தமிழக அரசு முயற்சிக்கிறதா?' என, உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கடந்த 2011 - 15 வரையிலான அ.தி.மு.க., ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது லஞ்சம் பெற்றுக் கொண்டு பணி ஆணைகளை வழங்கியதாக செந்தில் பாலாஜி மீது புகார்கள் எழுந்தன. கைது இது தொடர்பாக தமிழக போலீஸ், 2018ல் மூன்று வழக்குகளை பதிவு செய்திருந்தது. அதன்பின், இந்த விவகாரத்தை விசாரித்த அமலாக்கத் துறை, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் 2021 ஜூலையில் அவர் மீது வழக்கு பதிந்தது.இந்த சூழலில் தி.மு.க.,வில் இணைந்த செந்தில் பாலாஜி கரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதை அடுத்து, மின்சாரம் மற்றும் கலால் துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.அதே நேரம், வழக்கை தீவிரமாக விசாரித்து வந்த அமலாக்கத் துறை, சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் செந்தில் பாலாஜியை கடந்த 2023 ஜூன் 14ல் கைது செய்தது.இதனால், அவரது அமைச்சர் பதவி பறிபோனது. தொடர்ந்து 15 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்த நிலையில், உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பரில் அவருக்கு ஜாமின் வழங்கியது. சிறையில் இருந்து வெளியே வந்த ஓரிரு நாட்களிலேயே, அவர் மீண்டும் அதே இலாகாக்களின் அமைச்சராக பதவியேற்றார்.இதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்ந்தால், அவர் மீதான வழக்கு விசாரணை எப்படி நியாயமாக நடக்கும்' என, கேள்வி எழுப்பியது. 'ஒன்று அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையெனில் ஜாமினை ரத்து செய்து சிறைக்கு செல்ல உத்தரவிடுவோம்' என, எச்சரித்தது.இதனால், கடந்த ஏப்ரல் 27ல் அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்தார்.இந்நிலையில், செந்தில் பாலாஜி மீதான வழக்கு விசாரணை தொடர்பாக ஒய்.பாலாஜி என்பவர், உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை ஏற்கனவே தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், ஜாய்மால்யா பக்சி அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகள் முறையாக விசாரிக்கப்படவில்லை. வழக்கை இழுத்தடிக்க, 2,300 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்' என வாதிட்டார். இயலாத காரியம் இந்த வாதத்தை ஏற்றுக்கொண்டு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:இந்த வழக்கில் லஞ்சம் கொடுத்தவர்கள், லஞ்சம் வாங்கியவர்கள், அமைச்சரின் உதவியாளர்கள், அரசு அதிகாரிகள் என 2,300 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரிடமும் விசாரணை நடத்தி வழக்கை முடிப்பது என்பது இயலாத காரியம். இதில், பாதிக்கப்பட்ட நபர்களையும் குற்றவாளிகளாக சித்தரிக்க முயல்வது நன்றாகவே தெரிகிறது. வழக்கை இழுத்தடிக்க தமிழக அரசு முயல்கிறதா?எனவே, இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தவிர, இடைத்தரகர்களாக செயல்பட்டவர்கள், அமைச்சரின் பரிந்துரையின் பேரில் பணியாற்றிய அதிகாரிகள், பணம் பெற்று பணி ஆணை வழங்கியோர் என அனைவரது விபரங்களையும் தெரிந்து கொள்ள விரும்புகிறோம். இது தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.இவ்வழக்கில் தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, உச்ச நீதிமன்றம் கேட்ட விபரங்களை தாக்கல் செய்வதாக உறுதியளித்தார். இதையடுத்து இவ்வழக்கு இன்றும் விசாரணைக்கு வருகிறது.- டில்லி சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

theruvasagan
ஜூலை 30, 2025 23:28

குற்றம் சாட்டப்பட்டவரே நான் வாங்கின காசை திருப்பிக் கொடுத்து விட்டேன் என்று சொன்னதே குற்றத்தை ஒப்புக் கொண்டதாகதானே அர்த்தம். அப்புறம் எதற்கு இந்த வழக்கு விசாரணை மண்ணாங்கட்டி எல்லாம். நேராக தண்டனைதானே தரவேண்டும்


V Venkatachalam
ஜூலை 30, 2025 19:49

நமது டில்லி சிறப்பு நிருபர் இந்த விஷயத்தை தெளிவா சொல்லியிருக்கார். பாராட்டுகள். ஆனா ஒரு சின்ன வார்த்தை தப்பா இருக்கு. மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ன்னு இருக்கு. அது முட்டு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ன்னு இருக்கணும்.


தத்வமசி
ஜூலை 30, 2025 14:36

ஒரு மாநிலத்தின் அமைச்சர் மீதுள்ள வழக்குகளுக்கு ஆதாரம் உள்ளது என்பது தீர்மானம் ஆனால் அந்த வழக்கினை மற்ற மாநிலத்திற்கு தானாகவே மாற்றி விடும் சட்டம் இயற்றப் பட வேண்டும். முந்தைய நாள் சிறையில் இருந்து வருகிறார், மறுநாள் அமைச்சர் ஆகிறார். மற்றும் ஒருவருக்கு தண்டனை வழங்கப்பட்டு மீண்டும் அமைச்சர் ஆகிறார். பல வித காரணங்களைச் சொல்லி பெயிலில் வெள்ளியே வந்து நன்றாக அனுபவிக்கிறார்கள். சோனியா, ராகுல் மேல் உள்ள வழக்குகளின் நிலைமை என்ன ? 2 ஜி வழக்கின் நிலைமை என்ன ?


SP
ஜூலை 30, 2025 14:22

வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும்


Yaro Oruvan
ஜூலை 30, 2025 12:41

அடடே.. கண்டு புடிச்சிட்டீங்களா எசமான்.. இழுத்தடிக்கிறீங்களான்னு கேக்கவே 2 வருஷம்? விசாரிச்சு தீர்ப்பு சொல்லி .. ம்க்கும் .. நாலு மாமாங்கம் ஆயிருமே அதுக்குள்ள அணில் சுண்ணாம்பு ஆயிரும்


Muralidharan S
ஜூலை 30, 2025 12:34

திராவிஷன்கள் செய்த குற்றங்களுக்கு சிறை தண்டனை அனுபவிக்காமல், என்ன என்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்து தப்பி விடுவார்கள்.. ஆனால் இவர்கள் சேர்த்து வைத்து இருக்கும் பாவ கர்மாவின் மூலம் கிடைக்கப்போகும் கடவுள் தண்டனையில் இருந்து தப்பிக்கவே முடியாது.. புண்ணிய ஆத்மாக்களுக்கு, இறுதி காலம் என்பது அனாயசமாக, அதாவது ஒரு வியாதியும் இல்லாமல், நோய்நொடியில் வீழாமல், படுத்தப்படுக்கையாகி விடாமல் , நன்றாக இருக்கும்.


RAVINDRAN.G
ஜூலை 30, 2025 10:18

லஞ்சம் வாங்குவது குற்றம். அதேபோல லஞ்சம் கொடுப்பதும் குற்றமே. வேறொருவருக்கு நியாயமா கிடைக்கவேண்டிய வேலையை தடுத்து குறுக்கு வழியில் லஞ்சம் கொடுத்து காரியம் சாதிப்பது குற்றமே ஆகும். ஆகவே இந்த கேஸ் செந்தில்பாலாஜிக்கு சாதகமா அமையும். பாதகமா அமைந்தாலும் நிழல் அமைச்சரா எப்போதும் அதிகாரம் கொண்டவராவே கட்சியில் இருப்பார். சட்டம் சாமானியனின் கழுத்தை நெறிக்கும். அதிகாரம் படைத்தவர்களுக்கு வளைந்து கொடுக்கும். அன்றே அறிஞர் அண்ணா கூறினார் சட்டம் ஓர் இருட்டறை.


Ramona
ஜூலை 30, 2025 09:58

நாட்டுல இரண்டு சட்டங்கள்,ஒன்று ஏழை எளியவர்களுக்கு ள்,மற்றும் அப்பாவி ஜனங்களுக்கு, பாவப்பட்ட நடுத்தர மக்களுக்கு, இரண்டாவதாக பணக்கார,மிக பணக்கார, அதிகமா வர்கத்துக்கு ஆட்சி செய்பவர்களுக்கு ,இவை தான் நம்மை ஆளுகிறது


SVR
ஜூலை 30, 2025 09:58

இந்த திருடர்கள் முன்னேற்ற கழக அரசு எப்படியெல்லாம் களவாணிகள தப்பிக்க வைக்க முடியும் என்பதை தெளிவாக உலகத்திற்கு காண்பிக்கிறது. வேறொரு ஆங்கில நாளிதழில் தமிழ்நாடு சிஸ்டத்தை பிராட் செய்து விளையாடுகிறது என்று சேதி வெளியிட்டிருக்கிறது இன்று. திராவிட அரக்கர்கள் இதற்கெல்லாம் சளைத்தவர்களா? இல்லவே இல்லை. அவர்கள் தாங்கள் கொள்ளை அடிப்பதை கோர்ட் உட்பட யாரும் ஒன்றும் செய்து விட முடியாது என்று இறுமாப்புடன் இருக்கிறார்கள். இதற்கு ஒரே வழி அவர்களை வேருடன் துவம்சம் செய்வது தான். அதை செய்யும் வரை இம்மாதிரி சம்பவங்கள் ஓய போவதில்லை. தமிழ் மக்களோ திரும்ப திரும்ப இந்த அரக்கர்களை தேர்ந்து எடுத்து கொண்டிருக்கிறார்கள். அவ்வளவு மக்கு மக்கள் தமிழ் நாட்டில். அவர்கள் சுதாரித்து கொள்ளும் வரை இந்த அரக்கர்களுக்கு கொண்டாட்டம் தான். மக்கள் தான் காசுக்கு ஓட்டுகளை விற்கிறார்கள் என்ற சேதி தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறதே.


Chandru
ஜூலை 30, 2025 09:27

Toothless courts


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை