உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எல்லையில் நிலவும் பதற்றம்; முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை

எல்லையில் நிலவும் பதற்றம்; முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், முப்படைகளின் தலைமை தளபதி உடன் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்.பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் ட்ரோன்கள், ஏவுகணைகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், முப்படை தளபதிகளுடன், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார். போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார். பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

அமித்ஷா ஆலோசனை

டில்லியில் தனது இல்லத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடத்தினார். கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், எல்லை பாதுகாப்பு படை, சி.ஐ.எஸ்.எப்., இயக்குநர்கள், துணை ராணுவ படை அதிகாரிகள், உள்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். எல்லையின் தற்போதைய நிலை குறித்து ஆலோசனை நடந்தது.

மத்திய அமைச்சர் நட்டா ஆலோசனை

எல்லை பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், மருத்துவ உள்கட்டமைப்பு மற்றும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அவர் மருந்து பொருட்கள் கையிருப்பு இருப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Nada Rajan
மே 09, 2025 18:06

எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும்


Nada Rajan
மே 09, 2025 17:35

பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்க வேண்டும்


Srinivasan Srisailam Chennai
மே 09, 2025 16:54

தவறான கணக்கால் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறது பாகிஸ்தான். பலூசிஸ்தான் உள்நாட்டுப் பிரச்சினையை திசை திருப்ப இந்தியாவின் மீது தீவிரவாத தாக்குதலை தொடங்கி வைத்தது பாகிஸ்தான் பலூசிஸ்தான் பாகிஸ்தானில் அமைந்துள்ள மிகப்பெரிய மாநிலமாகும். குவெட்டா இதன் தலைநகராகும். தாதுப்பொருட்கள் மிகுந்த மாகாணம். பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் என்ற அமைப்பின் மூலம் பலுசிஸ்தானியர்கள் பல்லாண்டுகளாகத் தனி நாடு கேட்டு போராட்டம் செய்து வருகின்றனர். இவற்றில் இருந்து மக்களை திசை திருப்ப பாலக்காட்டில் தீவிரவாதத்தை தொடங்கி வைத்த பாகிஸ்தான் இந்தியாவுடன் லேசான பதட்டத்தை ஆரம்பித்து வைத்தது இதன் மூலம் பாகிஸ்தான் மக்களை திசை திருப்ப முயன்றது ஆனால் இந்தியாவின் பதிலடி தீவிரமாக இருக்கும் என்பதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஆப்பரேஷன் செந்தூர் மூலம் இந்தியா அடிக்க துவங்கியவுடன் அவர்கள் சிறிய அளவிலேயே நிறுத்தி தங்கள் மக்களை திசை திருப்பி இருக்கலாம், ஆனால் தங்கள் நிலை உணராமல் இந்தியாவை தாக்கத் தொடங்கியதன் மூலம் ஏற்கனவே பொருளாதாரத்தில் தள்ளாடிக் கொண்டிருக்கும் நாடு உள்நாட்டு பிரச்சினைகளினால் தடுமாறிக் கொண்டிருக்கும் நாடு ஒரு பெரிய அழிவினை நோக்கி தள்ளப்படும் நிலைக்கு வந்திருக்கிறது. நம் மத்திய அரசின் திரு மோடி அவர்களின் நிதானமான திட்டமிடப்பட்ட தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் தடுமாறி வருவதை உலகமே பார்த்துக் கொண்டிருக்கிறது. நம் முப்படைகளும் தங்களின் தேசப்பற்றியும் திறமைகளையும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது ஜெய்ஹிந்த் வாழ்க பாரதம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை