உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  புலி இன்னும் உயிருடன் தான் உள்ளது நிதிஷ் வீட்டின் முன் போஸ்டர்

 புலி இன்னும் உயிருடன் தான் உள்ளது நிதிஷ் வீட்டின் முன் போஸ்டர்

பாட்னா: பீஹாரில், தே.ஜ., கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்கவைத்துள்ள நிலையில், முதல்வர் நிதிஷ் குமார் வீட்டின் முன், 'புலி இன்னும் உயிருடன் தான் உள்ளது' என அவரைப் பாராட்டும் வகையில் 'போஸ்டர்'கள் ஒட்டப்பட்டுள்ளன. பீஹார் தேர்தல் முடிவுகளை அறிவிக்க துவங்கியது முதலே தே.ஜ., கூட்டணி முன்னிலை வகித்த நிலையில், மாநிலம் முழுதும் அக்கூட்டணி தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் வலம் வர துவங்கினர். இதேபோல் ஐக்கிய ஜனதா தள தலைவரும், பீஹார் முதல்வருமான நிதிஷ் குமாரின் வீட்டை நோக்கியும் அவரது ஆதர வாளர்கள் படையெடுத்தனர். நிதிஷ் வீட்டின் முன், 'புலி இன்னும் உயிருடன் தான் உள்ளது' என்ற வாசகத்துடன் கூடிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இந்த போஸ்டரில், நிதிஷ் குமார், அமைதியாக நிற்க, அவருக்கு அருகே புலி இருப்பது போல் வடிவமைக்கப்பட்டு இருந்தது அவரது ஆதரவாளர்களை பெரிதும் ஈர்த்தது. இந்தப் போஸ்டரை, புகைப்படம் எடுக்க பலர் போட்டியிட்டதால், அப்பகு தியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சமூக வலைதளங்களிலும் இப்போஸ்டர், அதிகளவு பகிரப்பட்டன. பீஹாரில் தே.ஜ., கூட்டணி ஆட்சியை தக்கவைத்துள்ள நிலையில், அந்தக் கூட்டணி சார்பில் முதல்வராக நிதிஷ் குமார் மீண்டும் தேர்வாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ