மேலும் செய்திகள்
பக்தர்களுக்கு இலவச பிசியோதெரபி
2 hour(s) ago
பிரான்ஸ் நாட்டு போலி விசா: தமிழக கும்பல் சிக்கியது
3 hour(s) ago | 1
பீஹார் சபாநாயகரானார் பா.ஜ.,வின் பிரேம் குமார்
3 hour(s) ago
'பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டமில்லை' புதுடில்லி 'பொதுத்துறை வங்கிகளை இணைக்கவோ, ஒருங்கிணைக்கவோ மத்திய அரசிடம் தற்போது எந்த திட்டமும் இல்லை' என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார். பார்லி.,யில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் கூறியிருப்பதாவது: ஐ.டி.பி.ஐ., வங்கியின் பங்கு விற்பனை, பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை கமிட்டியின் ஒப்புதல் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படும். தற்போதைய நிலையில், பொதுத்துறை வங்கிகளை இணைக்கவோ, ஒருங்கிணைக்கவோ மத்திய அரசிடம் எந்த திட்டமும் இல்லை. மேலும், பொதுத்துறை வங்கிகளில் அன்னிய நேரடி முதலீடு 20 சதவீதம் வரையிலும், தனியார் வங்கிகளில் 74 சதவீதம் வரையிலும் அனுமதிக்கப்படுகிறது. பொருளாதார வளர்ச்சிக்கான கடன் அல்லாத வள ஆதாரமாக அன்னிய நேரடி முதலீடு திகழ்கிறது. அதன் வாயிலாக, நாட்டின் பொருளாதாரத்துக்கு நீடித்த முதலீடு கிடைப்பதுடன், தொழில்நுட்ப பரிமாற்றம், வியூக முக்கியத்துவம் வாய்ந்த துறைகள், புதுமை கண்டுபிடிப்புகள், போட்டி, வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவை ஊக்குவிக்கப்படுகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
2 hour(s) ago
3 hour(s) ago | 1
3 hour(s) ago