மேலும் செய்திகள்
எடியூரப்பா மீது போக்சோ வழக்கு: சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை
45 minutes ago
பிரான்ஸ் நாட்டு போலி விசா: தமிழக கும்பல் சிக்கியது
52 minutes ago
பீஹார் சபாநாயகரானார் பா.ஜ.,வின் பிரேம் குமார்
1 hour(s) ago
சபரிமலை: சபரிமலையில் மண்டலகால வருமானம் கடந்தாண்டை விட எல்லா வகையிலும் அதிகரித்துள்ளது. கடந்த 15 நாட்களில் மொத்த வருமானம் ரூ.92 கோடி கிடைத்துள்ளது. கடந்த நவ., 16 மாலை முதல் சபரிமலையில் மண்டல காலம் துவங்கி நடந்து வருகிறது. தொடக்கத்தில் மூன்று நாட்கள் கட்டுக்கடங்கா கூட்டத்தால் பக்தர்கள் மிகவும் சிரமப்பட்டனர். பின் நிலைமை சீரடைந்து சில நாட்களைத் தவிர்த்து மற்ற நாட்களில் அதிக கூட்டம் தொடர்ந்து காணப்படுகிறது. ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கை 20 ஆயிரத்தில் இருந்து ஐந்தாயிரமாக குறைக்கப்பட்டதால் நீண்ட காத்திருப்பு மற்றும் நெரிசலும் குறைந்துள்ளது. சீசன் துவங்கிய 15 நாட்களில் வருமானம் ரூ.98 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டை விட இது 33.33 சதவீதம் அதிகம். கடந்த ஆண்டு இதே கால அளவில் ரூ.69 கோடியாக இருந்தது. அரவணை விற்பனையில் மட்டும் ரூ.47 கோடி கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.32 கோடியாக இருந்தது. 46.86 சதவீதம் அதிகரித்துள்ளது. அப்பம் விற்பனையில் ரூ.3.5 கோடி கிடைத்தது. இது கடந்த ஆண்டும் இதே அளவில் இருந்தது. காணிக்கையாக ரூ.26 கோடி கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு இது ரூ.22 கோடியாக இருந்தது. 18.18 சதவீதம் அதிகரித்துள்ளது. 15 நாட்களில் 12.47 லட்சம் பக்தர்கள் மலையேறி தரிசனம் செய்துள்ளனர். கடந்த ஆண்டை விட ஒரு லட்சம் பேர் அதிகம். மண்டல சீசன் துவங்கும் முன் 46 லட்சம் டின் அரவணை ஸ்டாக் செய்யப்பட்டிருந்தது. தற்போது இது 27 லட்சமாக குறைந்துள்ளது. சாதாரண நிலையில் வினியோகம் நடந்தால் அரவணைக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்று சபரிமலை செயல் அலுவலர் ஓ.ஜி.பிஜு கூறினார். கூட்டம் ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால் பக்தர்கள் அதிக அளவில் அரவணை வாங்குகின்றனர். கூட்டம் அதிகமாகி நீண்ட காத்திருப்பு இருக்கும்போது பிரசாதம் கூட வாங்க முடியாமல் பக்தர்கள் திரும்பி செல்வர். தற்போது இரண்டரை லட்சம் டின் அரவணை உற்பத்தி செய்யப்படுகிறது. இதை 3 லட்சமாக அதிகரித்தால் மட்டுமே தட்டுப்பாடு இல்லாமல் வழங்க முடியும் என்று கருதப்படுகிறது. இதற்கான ஆலோசனையும் நடக்கிறது. டிச., 5 திருவனந்தபுரத்தில் நடக்கும் தேவசம் போர்டு கூட்டத்துக்கு பின் அன்னதானத்தில் மதியம் பாயாசத்துடன் விருந்தளிப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.
45 minutes ago
52 minutes ago
1 hour(s) ago