உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிவிங்கி புலிகளின் தாகத்தை தணித்தவருக்கு சிக்கல்

சிவிங்கி புலிகளின் தாகத்தை தணித்தவருக்கு சிக்கல்

போபால் : மத்திய பிரதேசத்தில், கோடை வெப்பத்தில் தவித்த சிவிங்கி புலிகளுக்கு தண்ணீர் வைத்ததால், ம.பி.,யில் உள்ள குனோ தேசிய பூங்கா டிரைவரின் வேலைக்கு சிக்கல் ஏற்பட்டது. மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில், 'குனோ தேசிய உயிரியல் பூங்கா' என்ற வன விலங்குகள் சரணாலயம் உள்ளது. நம் நாட்டில் சிவிங்கி புலிகள் இனம் குறைந்து விட்டதாக கூறப்படும் நிலையில், 2022-ல் இந்த பூங்காவுக்கு நமீபிய சிவிங்கி புலிகள் கொண்டு வரப்பட்டன. பிரதமர் நரேந்திர மோடி, இவற்றை பூங்காவுக்கு வழங்கினார். தற்போது, இந்த சிவிங்கி புலிகளுக்கு தண்ணீர் கொடுத்த ஒருவர், சர்ச்சையில் சிக்கி உள்ளார். குனோ பூங்காவில் டிரைவராக வேலை பார்க்கும் சத்ய நாராயண் குர்ஜார் என்பவர், பிளாஸ்டிக் கேனில் தண்ணீரை எடுத்துச் சென்று, பெரிய உலோக பாத்திரத்தில் அதை நிரப்பி, மரத்தின் அடியில் வைத்துள்ளார். பூங்காவில் இருக்கும் 'ஜுவாலா' என பெயரிடப்பட்ட பெண் சிவிங்கி புலியும், அதன் குட்டிகளும் அந்த தண்ணீரை குடித்தன. சத்ய நாராயண் தண்ணீர் வைத்த இந்த வீடியோ, உலக அளவில் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. தாகத்தால் தவித்த சிவிங்கி புலிகளுக்கு துணிச்சலுடன் தண்ணீர் வைத்ததாக இணையவாசிகள் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர். கோடை வெயிலில் தவிக்கும் விலங்குகளுக்கு சிறியதாக குளம் போன்று அமைத்து தண்ணீரை வைக்கலாம் என்றும், சிலர் யோசனை தெரிவித்தனர். ஆனால், தண்ணீர் கொடுத்த சத்ய நாராயணுக்கோ நெருக்கடிகள் ஏற்பட்டன. குனோ பூங்காவில், விலங்குகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுவதாக விமர்சனங்கள் எழுந்தன. பூங்கா விதிகளின்படி, அவர் தவறு செய்து விட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. சிறுத்தை, புலி, சிங்கம் உள்ளிட்ட விலங்குகளின் அருகில், அவற்றின் பராமரிப்புக்காக நியமிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ பணியாளர்கள் மட்டுமே செல்ல வேண்டும்;. அதற்கு மாறாக, சிவிங்கி புலிகளின் அருகே சத்ய நாராயண் சென்றதால் அவரை பணிநீக்கம் செய்து, பூங்கா நிர்வாகம் உத்தரவிட்டது. இதையடுத்து, 'இளகிய மனம், இரக்க குணம் கொண்டவருக்கு தண்டனையா?' என, ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், அவர் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Ravikanth SP
ஏப் 16, 2025 01:40

என்னடா சொல்லவர???


MAGESH A
ஏப் 14, 2025 22:00

ஒருவர் உதவி செய்தால் அவரை பாராட்டும் உண்மையே ஒழிய அவரை இழிவு படுத்த கூடாது


Bhaskaran
ஏப் 14, 2025 18:56

நம் ஊர் அதிகாரிகள் போலத்தான் மக்கள் வசூல் செய்து சாலை போட்டால் அதை பெயர்த்துஎடுக்க வந்தார்கள் என்று செய்தி


vsperumal
ஏப் 14, 2025 13:21

எந்த ஒரு வேலையும் விதிமுறைகள் படி தான் செய்ய வேண்டும். முதலில் தனது பாதுகாப்பு. விலங்குகளுக்கு உதவுவது நல்லது. அதே இடத்தில் வேலை செய்யும் ஒருவர் இவ்வாறு பதிவு செய்வது. இது மற்ற பிரச்சினைகளுக்கு முன் உதாரணமாக மாறிவிடும். இது போன்ற விஷயங்களை அவர் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒழுக்கம் உயிரினும் உயர்வானது. அனைத்து பணியாளர்களும் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.


Mecca Shivan
ஏப் 14, 2025 11:12

திமுகவிற்கு சளைத்ததல்ல பிஜேபி ..இதுபோன்ற பழிவாங்குதல் தவறை மறைக்க அப்பாவியை குற்றவாளியாக்குவது நான் சொல்வது திராவிட ஊழல் பெருச்சாளிகளை அல்ல ..


கிருஷ்ணதாஸ்
ஏப் 14, 2025 10:58

தண்ணீர் வைத்தது தவறில்லை! அதைப் பதிவு செய்து, வெளியிட்டதுதான் தவறு!!


Mummoorthy Ayyanasamy
ஏப் 14, 2025 09:47

பணியில் சேர்த்து கொண்டதற்கு நன்றி.மனித நேயம் பாரட்டுக்கு உரியது.


Columbus
ஏப் 14, 2025 09:07

What if the cheetas attacked the driver and he were to die of the attack? Then the same people will blame the park administration.


Sampath Kumar
ஏப் 14, 2025 08:02

மனித செயம் அற்ற உயிர்களை மதிக்க தெரியாத அதைக்கார வெறி பிடித்த ஆட்சியில் இப்படித்தான் இருக்கும்


வாய்மையே வெல்லும்
ஏப் 14, 2025 09:04

புலிகளுக்கு தண்ணி வைக்கவில்லை சரி.. அதுக்கு என்ன அதிகார வெறி பிடிச்ச ஆட்சி வாகெய்ரா உருட்டல் .. திராவிட மாடல் அரசு இருநூறு உடன்பிறப்புகள் சினிமா கதை வசனம் சொதப்பல் ஒய் . உங்க தகர டப்பா கதை உருட்டை மூன் பிக்ச்சர்ஸ் கூட விலைக்கு வாங்கமாட்ட்டான் ..அப்படியே குப்பைக்கு தான் சமர்ப்பணம் ..


அப்பாவி
ஏப் 14, 2025 07:10

போங்க...


சமீபத்திய செய்தி