உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கலக்கும் ஜடேஜா… திணறும் வெஸ்ட் இண்டீஸ்; 2வது டெஸ்டிலும் இந்தியா ஆதிக்கம்

கலக்கும் ஜடேஜா… திணறும் வெஸ்ட் இண்டீஸ்; 2வது டெஸ்டிலும் இந்தியா ஆதிக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2வது நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 318 ரன் எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால் 173 ரன்னுடனும், கில் 20 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்த நிலையில், 2ம் நாள் ஆட்டம் தொடங்கியதும் இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜெய்ஸ்வால் 175 ரன் எடுத்திருந்த போது ரன் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். மறுமுனையில் அபாரமாக ஆடிய கேப்டன் கில் தன்னுடைய 5வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். நிதிஷ் ரெட்டி (43), ஜூரெல் (44) ஆகியோர் ஓரளவுக்கு பங்களிப்பு கொடுத்தனர். இறுதியில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 518 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. கில் 129 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதைத் தொடர்ந்து பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. கேம்ப்பெல் (10), சந்திரபால் (34), சேஸ் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஜடேஜா கைப்பற்றி அசத்தினார். நிதானமாக ஆடிய அதானஷேவை (41) குல்தீப் யாதவ் வீழ்த்தினார். 2ம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்திருந்தது. சாய் ஹோப் 31 ரன்னுடனும், டெவின் 14 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

மணிமுருகன்
அக் 11, 2025 23:20

அருமை வாழ்த்துக்கள்


mdg mdg
அக் 11, 2025 20:15

எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெரும் தமிழன் அங்கே அத்திலக வாசனைப் போல் அனைத்து உலகம் இன்ப முற.


புதிய வீடியோ