மேலும் செய்திகள்
பார்லி.,க்கு நாய் குட்டியுடன் வந்த காங்., - எம்.பி., ரேணுகா
8 hour(s) ago | 5
பார்லி.,யில் நேற்று...
9 hour(s) ago
கடற்கரை மண்டல மேலாண்மை திட்டத்திற்கான வரைவு ஆலோசனை
9 hour(s) ago
புதுடில்லி: ''ஆப்பரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து ஏராளமான வணிகக் கப்பல்கள் பாகிஸ்தான் நாட்டிற்கு பயணிப்பதைத் தவிர்த்துள்ளதால், அந்நாட்டிற்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது'' என இந்திய கடற்படை தளபதி அட்மிரல் திரிபாதி தெரிவித்துள்ளார்.இது குறித்து இந்திய கடற்படை தளபதி, அட்மிரல் திரிபாதி கூறியதாவது: ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கை இன்னும் செயல்பாட்டில் உள்ளது. அது இன்னும் முடிவுக்கு வரவில்லை. பாகிஸ்தானுடனான விரோதப் போக்கைத் தொடர்ந்து கடந்த ஏழு - எட்டு மாதங்களில் மேற்கு அரேபிய கடல் உள்ளிட்ட பகுதிகளில் போர் நடவடிக்கைக்கு இந்திய கடற்படை தயாராக உள்ளது. மே மாதம் நடந்த ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது தனது படையின் ஆக்ரோஷமான நிலைப்பாடு. பாகிஸ்தான் கடற்படையை அதன் துறைமுகங்களுக்கு அருகில் இருக்க, இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தியது. ஆப்பரேஷன் சிந்தூரின் போது உடனடி நடவடிக்கையை இந்திய கடற்படையின் போர்க் குழு மேற்கொண்டது. இந்தியாவின் ஆப்பரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து ஏராளமான வணிகக் கப்பல்கள் பாகிஸ்தான் நாட்டிற்கு பயணிப்பதைத் தவிர்த்துள்ளது. இதனால் பாகிஸ்தானும் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் கப்பல்களின் இன்சூரன்ஸ் செலவும் அதிகரித்துள்ளது. இவ்வாறு இந்திய கடற்படை தளபதி அட்மிரல் திரிபாதி தெரிவித்துள்ளார்.
8 hour(s) ago | 5
9 hour(s) ago
9 hour(s) ago