புடினை சந்திக்க ராகுலுக்கு அனுமதி மறுப்பு ஏன்?
புதுடில்லி: டில்லி வந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருந்து அளித்தார். அதில் பங்கேற்க, காங்., - எம்.பி., சசி தரூருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலுக்கோ அல்லது ராஜ்ய சபா எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கோ அழைப்பில்லை. இது காங்கிரசாரை எரிச்சலில் ஆழ்த்தி விட்டது.'வெளியுறவு விவகாரங்களுக்கான பார்லி., குழுவின் தலைவராக, சசி தரூர் உள்ளதால் அழைப்பு விடுக்கப்பட்டது' என, சொல்லப்பட்டது. ஐ.நா., சபையில் பணியாற்றிய தரூர், வெளிநாட்டு விவகாரங்களில் நிபுணர். 'ஆப்பரேஷன் சிந்துார்' தொடர்பாக, அமெரிக்கா உட்பட வெளிநாட்டு அதிபர்களுக்கு, இந்தியாவின் நிலையை எடுத்துச் சொல்ல, பிரதமர் மோடியால் அனுப்பி வைக்கப்பட்டவர்.இவரு க்கும், மத்திய அரசுக்கும் இடையே நட்பு உள்ளது. இதனால், அடிக்கடி காங்கிரசின் கொள்கைகளுக்கு எதிராக பேசி வருகிறார். 'பார்லி.,யை முடக்கக்கூடாது' என, சமீபத்தில் இவர் கூறியது, காங்கிரசை வெறுப்பில் ஆழ்த்தியுள்ளது. இப்படிப்பட்ட காரணங்களால், புடின் வி ருந்திற்கு சசி தரூர் அழைக்கப்பட்டார்.வழக்கமாக, வெளிநாட்டு அதிபர்கள் இந்தியா வந்தால், எதிர்க்கட்சி தலைவர்கள் சந்திப்பது வழக்கம். ஆனால், ரஷ்ய அதிபர் புடினை சந்திக்க ராகுலுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை. இதை ராகுல் கண்டித்துள்ளார்.வெளிநாடுகளுக்கு சென்று, அங்கு இந்தியாவை வசைபாடி வருகிறார் ராகுல். 'இந்தியாவின் பொருளாதாரம் செத்து விட்டது' என, அமெரிக்க அதிபர் டிரம்ப் சொன்னதை வரவேற்று ஆதரித்தவர் ராகுல். இது மோடிக்கு பிடிக்கவில்லை. 'புடினை சந்தித்தால் இந்தியாவிற்கு எதிராகவே பேசுவார்' என்பதால், இந்த சந்திப்பை தடை செய்து விட்டாராம் மோடி.