உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பணியாளர்கள் 600 பேரை வெளியேற்றியது ஸொமேட்டோ

பணியாளர்கள் 600 பேரை வெளியேற்றியது ஸொமேட்டோ

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸொமேட்டோ தனது வாடிக்கையாளர் சேவை பிரிவில் , 600 பணியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளது.ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களின் முன்னணியில் இருக்கும் ஸொமேட்டோவில், ஆயிரக்கணக்கானோர் பணிபுரிந்து வருகின்றனர். இதில் ஸொமேட்டோ அசோசியேட் ஆக்சிலேட்டர் புரோகிராம் (இசட்.ஏ.ஏ.பி) பிரிவின் கீழ் 1,500 வாடிக்கையாளர் பராமரிப்பு நிர்வாகிகள் நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டனர். இந்நிலையில், ஸொமேட்டோ நிறுவனம், வாடிக்கையாளர் சேவை பிரிவில் பணியாற்றும் 600 பேரை பணியிலிருந்து நீக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.அந்நிறுவனத்தில் ஒரு வருடம் பணி முடித்த பிறகு பதவி உயர்வுக்காக காத்திருந்த இந்த ஊழியர்கள் தற்போது பணி நீக்கத்தை சந்தித்துள்ளனர். வாடிக்கையாளர் சேவையை தானியங்கி முறைக்கு மாற்றும் திட்டத்துடன் இந்த பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

அப்பாவி
ஏப் 02, 2025 07:36

ஆஹா வந்திருச்சு... ஏ.ஐ வந்திருச்சு. முதல்க இவனுங்க மூலம் வாங்கி துண்றதை நிறுத்துங்க. குடுக்கற காசில் இவிங்க 28 பர்சண்ட் அடிச்சுடறாங்க.


m.arunachalam
ஏப் 01, 2025 23:25

இதுபோல இன்னும் பல விஷயங்கள் நடக்க உள்ளது . இவர்களின் சேவையை பயன்படுத்தும் இருதரப்பினரையும் மொட்டை அடிக்கும் இவர்கள் தொழிலாளிகளையும் அவ்வாறெ நடத்துவார்கள் .


Shankar
ஏப் 01, 2025 22:53

பசங்க என்னை முந்திக்கொண்டு வேகமாக செல்வார்கள் நானே பல தடவை கண்ணா பின்னா என திட்டியிருக்கிறேன் ஆனால் இன்று அவர்கள் நிலைமை கொடுமை காரணம் பல வேலையற்ற இளைஞர்களை கொஞ்சம் பொறுப்புடன் ஒரு பைக் உடன் வாழ வழி வகுத்தது இந்த வாழ்க்கை அதுவும் தொலைந்து விட்டது இந்த ஏ ஐ தொழில் நுட்பத்தால் என்பது கொடுமை


Shankar
ஏப் 01, 2025 22:51

கொடுமை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை