உள்ளூர் செய்திகள்

ஊரக திறனாய்வில் தேர்ச்சி பெற்ற மாணவர் விபரம் சரிபார்க்க உத்தரவு

சேலம்: தமிழகத்தில் ஊரக பகுதிகளில் உள்ள மாணவ, மாணவியரை ஊக்குவிக்க, ஊரக திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. 9ம் வகுப்பு மாணவ, மாணவியர் பங்கேற்க முடியும்.இதில் மாவட்டத்தில் முதலிடம் பிடிக்கும், 50 மாணவர்கள், 50 மாணவியர் தேர்வு செய்யப்பட்டு, 4 ஆண்டுக்கு தலா, 1,000 ரூபாய் வீதம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.நடப்பு கல்வியாண்டு ஊரக திறனாய்வு தேர்வு, கடந்த டிச., 6ல் நடத்தப்பட்டது. அதில், 1.04 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இத்தேர்வு முடிவு நேற்று முன்தினம் வெளியானது. ஒவ்வொரு மாவட்டத்திலும், உதவித்தொகைக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவியர் பட்டியல், பள்ளிகளுக்கு சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது.தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியரின் விபரங்களான, அவர்களது பெயர், இனிசியல், பிறந்த தேதி உள்ளிட்டவற்றில் திருத்தம் இருப்பின், உரிய ஆதாரங்களுடன், வரும், 27க்குள் அனுப்பி வைக்கும்படி, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்