வேலை வாய்ப்பு அலுவலக பதிவுக்கு தனியாரை நம்பி ஏமாற வேண்டாம்
நாமக்கல்: மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக சேவைகளுக்காக, விண்ணப்பதாரர்கள் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என, கலெக்டர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:வேலைவாய்ப்புப் பதிவு, பதிவு புதுப்பித்தல், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை, கூடுதல் பதிவு, முகவரி மாற்றம் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் வெப்சைட்டில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களால் எந்தவித கட்டணமும் இன்றி இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், அனைத்து சேவைகளையும் www.tnvelaivaaippu.gov.in என்ற வெப்சைட்டில் ஆன்லைன் மூலம் மனுதாரர்களே நேரடியாக செய்து கொள்ளவும் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.எனவே, பொதுமக்கள் யாரும் போலி விளம்பரங்களையோ அல்லது இடைத்தரகர்களையோ நம்பி, தனிப்பட்ட விவரங்களையோ அல்லது பணத்தையோ கொடுத்து ஏமாற வேண்டாம்.இவ்வாறு கூறியுள்ளார்.