உள்ளூர் செய்திகள்

மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவியருக்கான கபடி போட்டி

கோவை: மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவியருக்கான கபடி போட்டியில் மாணவ, மாணவியர் அசத்தலாக பங்கேற்றனர்.சின்னவேடம்பட்டி டி.ஆர்.ஏ., மேல்நிலை பள்ளி மற்றும் முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில், 17, 19 வயது சீனியர், சூப்பர் சீனியர் பிரிவு மாணவ, மாணவியருக்கான கபடி போட்டி, பள்ளியில் துவங்கியது. மாணவர் பிரிவில், 13 பள்ளிகளும், மாணவியர் பிரிவில் 14 பள்ளிகளும் பங்கேற்றன. மாணவர் 17 வயது சீனியர் பிரிவு முதல் போட்டியில், டி.ஆர்.ஏ.,பள்ளி 26-10 புள்ளிக் கணக்கில் ரூபி மெட்ரிக் பள்ளியையும்; 2வது போட்டியில், டி.கே.எஸ்., பள்ளி 18-10 புள்ளிக் கணக்கில் கோவில்பாளையம் அரசு பள்ளியையும்; 3வது போட்டியில், காரமடை அரசு பள்ளி 22-8 புள்ளிக் கணக்கில் சரவணம்பட்டி அரசு பள்ளியையும் வென்றன. 19 வயது சூப்பர் சீனியர் பிரிவு முதல் போட்டியில், செட்டிபாளையம் அரசு பள்ளி 27-12 புள்ளிக் கணக்கில் டி.ஆர்.ஏ., பள்ளியையும்; 2வது போட்டியில், டி.கே.எஸ்., பள்ளி 13-8 புள்ளிக் கணக்கில் கோவில்பாளையம் அரசு பள்ளியையும்; 3வது போட்டியில், காரமடை அரசு பள்ளி 38-35 புள்ளிக் கணக்கில் செட்டிபாளையம் அரசு பள்ளியையும்; 4வது போட்டியில், சித்தாபுதுார் மாநகராட்சி பள்ளி 28-12 புள்ளிக் கணக்கில் டி.கே.எஸ்.,பள்ளியையும் வென்றன. மாணவியர் 17 வயது சீனியர் பிரிவு முதல் போட்டியில், சின்னவேடம்பட்டி டி.ஆர்.ஏ., பள்ளி, 15-7 புள்ளிக் கணக்கில் பட்டணம் அரசு பள்ளியையும்; 2வது போட்டியில், டி.கே.எஸ்.,பள்ளி 26-16 புள்ளி கணக்கில் காரமடை அரசு பள்ளியையும் வென்றன. 19 வயது சூப்பர் சீனியர் பிரிவு முதல் போட்டியில், டி.ஆர்.ஏ.,பள்ளி 22-11 புள்ளிக் கணக்கில் கோவில்பாளையம் பள்ளியையும்; 2வது போட்டியில், சுதந்திரா பள்ளி 31-10 புள்ளிகணக்கில் டி.கே.எஸ்., பள்ளியையும் வென்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்