தொழில்நுட்ப மேம்பாடு கலந்துரையாடல் ஐ.ஐ.டி., பாலக்காடுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
பாலக்காடு: ஐ.ஐ.டி., பாலக்காடு டெக்னாலஜி ஐஹப் பவுண்டேஷன் மற்றும் ஐ.ஐ.டி., டெக்னாலஜி இன்னோவேஷன் பவுண்டேஷன் ஒருங்கிணைந்து ஐ.ஐ.டி., பாலக்காடு டெக் கனெக்ட் என்ற தலைப்பில் கோவையில் முதல் வணிக கூட்டம் நடந்தது.இதில், 100க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், மத்திய அரசின் ஆத்மா நிர்பர் பாரத், விஷன் 2047 ஆகியவைக்கு ஏற்ப துறைகளில் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான, தொழில்துறை மற்றும் கல்வித்துறை ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடல் நடந்தது.ஐ.ஐ.டி., பாலக்காடு இயக்குனர் சேஷாத்திரி சேகர் கூட்டத்துக்கு தலைமை வகித்தார். சூலூரில் உள்ள பி.ஆர்.டி., ஏர் கமாண்டிங் அதிகாரி ஏர் கமாண்டர் விஷ்ணு கவுர் பங்கேற்றனர். அரவங்கோடு கார்டைட் தொழிற்சாலை தலைமை மேலாளர் நாயிகா, ஆம்பியர் இ.வி. நிறுவனர் ஹேமலதா அண்ணாமலை, சியாமா தலைவர் மிதுன் ராம்தாஸ் ஆகியோர் பேசினர்.கோவையில் உள்ள தொழில்துறையினர், பாலக்காடு ஐ.ஐ.டி.,யுடன் ஆட்டோமேஷன், மேம்பாடு மற்றும் கூட்டு ஆராய்ச்சி துறைகளில் பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் குறித்து கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.ஐ.ஐ.டி., பாலக்காடு மற்றும் பவுண்டரீஸ் டெவலப்மென்ட் பவுண்டேஷன், கோயம்புத்தூர் ஆகிய நிறுவனங்களுக்கு இடையே ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.