மாநில போட்டிக்கான தேர்வு ஹாக்கி வீரர்களுக்கு அழைப்பு
சென்னை: மாநில ஹாக்கி போட்டிக்கான சென்னை மாவட்ட ஆண்கள் அணி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.ஆண்களுக்கான மாநில அளவிலான ஹாக்கி போட்டி, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில், இம்மாதம் 9ல் துவங்கி, 13ம் தேதி வரை நடக்கிறது.போட்டியில், சென்னை உட்பட பல்வேறு மாவட்ட அணிகள் பங்கேற்று, திறமையை வெளிப்படுத்துகின்றன. போட்டியில் பங்கேற்கும் சென்னை மாவட்ட அணிக்கான வீரர்கள் தேர்வு சோதனை, நாளை பிற்பகல் 03:30 மணிக்கு, எழும்பூர் ராதாகிருஷ்ணன் அரங்கில் நடக்கிறது.விபரங்களுக்கு, 63831 46742 என்ற மொபைல் போன் எண்ணில், செயலர் உதயகுமாரை அணுகலாம் என, சென்னை மாவட்ட ஹாக்கி சங்கம் தெரிவித்துள்ளது.