உள்ளூர் செய்திகள்

பொருளாதார வரலாற்றை மாற்றி எழுதிய சாம்சங் நிறுவனம்

சென்னை: ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள 'சாம்சங்' நிறுவனம், ஒரு பிராந்தியத்தின் தலையெழுத்தையே மாற்றி எழுதி, நாட்டில் தொழில் புரட்சியை உருவாக்கி உள்ளதாக தெரிவித்துள்ளது.சாம்சங் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:வெறும் விவசாய நிலமாக இருந்த ஸ்ரீபெரும்புதுார், இன்று நாட்டின் உற்பத்தி துறை வரலாற்றை மாற்றி எழுதியுள்ளது. கடந்த 2008க்குள் 2,000 கோடி டாலர் முதலீடுகளை ஈர்த்த இப்பகுதி, ஆட்டோ மொபைல்ஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறைகளின் உலகளாவிய மையமாக மாறியுள்ளது.சாம்சங் நிறுவனம், 2007ல் தொழிற்சாலையைத் தொடங்கிய போது, ஒரு புதிய தரத்தையே உருவாக்கியது. இன்று, அங்கிருந்து நவீன, 'டிவி'கள், ஏ.ஐ., தொழில்நுட்ப வாஷிங் மிஷின்கள் மற்றும் பிரிஜ் உள்ளிட்டவை உலக நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.நாட்டின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில், 41 சதவீதத்தை தமிழகம் வழங்குகிறது. இதன் பின்னணியில் ஸ்ரீபெரும்புதுார் முக்கிய பங்கு வகிக்கிறது.இந்திய தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் 42 சதவீதம் பேர், தமிழகத்தில் தான் உள்ளனர். ஸ்ரீபெரும்புதுார் போன்ற பகுதிகளில் உள்ள நவீன ஆலைகள், பெண்களுக்கு பொருளாதார சுதந்திரத்தை அளித்துள்ளன.கடந்த 2022 - 23ம் ஆண்டில், திருவள்ளூர் மாவட்டத்தின் தனிநபர் வருமானம், 3 லட்சத்து, 74,688 ரூபாயாக உயர்ந்துள்ளது.ஒரு தொழிற்சாலை என்பது வெறும் கட்டடம் மட்டுமல்ல. அது திறக்கப்பட்ட பின், டியூஷன் சென்டர்கள், மருத்துவமனைகள் மற்றும் ஷோரூம்கள் என, ஒரு புதிய பொருளாதார சங்கிலியையே உருவாக்கியுள்ளது.'மாதச் சம்பள பொருளாதாரம்' மக்களின் வாங்கும் திறனை உயர்த்தி, எதிர்கால திட்டமிடலுக்கான நம்பிக்கையை விதைத்துள்ளது. வெறும் புள்ளி விபரங்களைத் தாண்டி, ஒரு சமூகத்தையே மாற்றியமைத்த பெருமை ஸ்ரீபெரும்புதுாருக்கு உண்டு.இவ்வாறு சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்