உள்ளூர் செய்திகள்

ராமச்சந்திரா பல்கலையில் வருகை தரும் பேராசிரியராகிறார் கலாம்

ஆசிரியராக இருப்பதையே மிகவும் விரும்பும் அப்துல் கலாம் ஏற்கனவே, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில்  வருகை தரும் பேராசிரியர் (விசிட்டிங் புரொபசர்) ஆக உள்ளார். இந்நிலையில், சென்னை ராமச்சந்திரா பல்கலைக்கழக மருத்துவ மற்றும் பாராமெடிக்கல் மாணவர்களுக்கு பாடம் சொல்லித்தரவும் ஒப்புதல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘கலாம் நர்சிங் மற்றும் ஆய்வு மாணவர்களுக்கு வழிகாட்டியாகவும் விளங்க உள்ளார். டெலிமெடிசின், இ-கவர்னன்ஸ் போன்ற துறைகளில் அப்துல் கலாமின் வழிகாட்டுதலில் ஆய்வு மேற்கொள்ள பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ளனர். செப்டம்பர் 30ம் தேதி பல்கலைக்கழக மாணவர்களுடன் முதல் கலந்துரையாடலில் அப்துல் கலாம் ஈடுபடப்போவதாகவும்’ தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்