உள்ளூர் செய்திகள்

இந்திய பல்கலைக்கழகங்கள் மீது வெளிநாட்டு மாணவர்கள் மோகம்

குறிப்பாக, இளங்கலை பட்டப்படிப்பு படிக்க அதிக அளவில் வருகின்றனர். கடந்த 2005-06ம் ஆண்டில், இந்திய பல்கலைக் கழகங்களில் படிக்கும் மாணவர்கள் தொடர்பாக, உஷா ராய் நெகி மற்றும் தயானந்த் டான்கோன்கர் ஆகியோர் ஆய்வு ஒன்றை நடத்தினர். அந்த ஆய்வில் தெரியவந்துள்ள தகவல்கள் விபரம் வருமாறு: கடந்த 1990ம் ஆண்டுகளின் முதல் பாதியில் இருந்து, இந்தியாவிற்கு படிக்க வரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே இருக்கிறது. 1993-94ம் ஆண்டுகளில், 13 ஆயிரம் பேர் படித்துள்ளனர்.  இந்தியாவுக்கு படிக்க வரும் மாணவர்களில் 80 சதவீதம் பேர் இளங்கலை பட்டப் படிப்பில் தான் சேர்கின்றனர். மேலும், நகரின் பிரதான பகுதிகளில் உள்ள பல்கலைக்கழகங்களிலேயே படிக்க விரும்புகின்றனர். இளங்கலை பட்டப்படிப்பில், வர்த்தக பாடப் பிரிவையே அதிகம் பேர் எடுத்துப் படிக்கின்றனர். பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் உள்ள கல்வி நிறுவனங்கள், வெளிநாட்டு மாணவர் களை அதிக அளவில் ஈர்க்க பல விதமான மார்க்கெட்டிங் யுத்திகளை பின்பற்றி வருகின்றன. இருந்தும், இந்தியாவுக்கு வரும் மாணவர்கள் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்துள்ளது. 2005-06ம் ஆண்டில், மேற்கு ஆசிய, தெற்கு ஆசிய மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் இருந்தும், ஐக்கிய அரசு குடியரசு நாடுகளில் இருந்தும் ஏராளமான மாணவர்கள் இந்தியாவுக்கு படிக்க வந்துள்ளனர். ஐக்கிய அரபு குடியரசில் இருந்து 2004-05ம் ஆண்டில், ஆயிரத்து 500 மாணவர்கள் வந்தனர். 2005-06ல் இந்த எண்ணிக்கை இரண்டாயிரத்து 34 ஆக கூடியுள்ளது. இதே ஆண்டில் நேபாளத்தில் இருந்து ஆயிரத்து 411 மாணவர்களும், ஈரானிலிருந்து ஆயிரத்து 264 மாணவர்களும் இந்தியாவுக்கு படிக்க வந்துள்ளனர். வளரும் நாடுகளைச் சேர்ந்த மாணவர்களே இங்கு அதிக அளவில் படிக்க வருகின்றனர். இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்