உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம்

பெங்களூரு: குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, கர்நாடகாவில் அரசு பள்ளிகளில் இன்று பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பு கூட்டம் நடத்த அரசு உத்தரவிட்டு உள்ளது.அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:குழந்தைகள் தினத்தை ஒட்டி மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு துவக்க, நடுநிலை பள்ளிகள், பி.யு., கல்லுாரிகளில் இன்று பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பு கூட்டத்தை நடத்த வேண்டும்.இந்த கூட்டத்தின் மூலம் பெற்றோர் நம்பிக்கையை பெற்று, அரசுபள்ளி, கல்லுாரிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க முடியும். இந்த கூட்டத்தின் போது கல்வி, பிற நடவடிக்கைகளில் சிறந்து விளங்கும் மாணவர்களை கவுரவிக்க வேண்டும். பள்ளிகளை அலங்கரித்து திருவிழா போல கொண்டாட, பள்ளி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்