உள்ளூர் செய்திகள்

எம்எஸ்எம்இ நிறுவனங்களின் சர்வதேச வர்த்தக நடவடிக்கைகள்

புதுடில்லி: எம்எஸ்எம்இ துறையின் சர்வதேச வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி போட்டித்தன்மையை உயர்த்த மத்திய அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது. இதன் விளைவாக, 2023-24-ல் 45.74% இருந்த எம்எஸ்எம்இ ஏற்றுமதி விகிதம் 2024-25-ல் 48.55% ஆக உயர்ந்துள்ளது. ஏற்றுமதி ஊக்குவிப்பு இயக்கம், நிதி வசதி, தரநிலை இணக்க உதவி, புதிய சந்தை வாய்ப்புகள் மற்றும் சரக்குப் போக்குவரத்து மேம்பாடு போன்ற நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன.ஜிஎஸ்டி சீர்திருத்தங்களும் எம்எஸ்எம்இக்களுக்கு பெரிய பலனாக அமைந்துள்ளது. குறைந்த ஜிஎஸ்டி விகிதங்கள் மூலப்பொருள் செலவை குறைத்து, வாகன உற்பத்தி, ஜவுளி, உணவுப் பதப்படுத்துதல், கைவினை, சரக்குப் போக்குவரத்து போன்ற துறைகளின் வளர்ச்சிக்கு உதவி செய்துள்ளதாக அமைச்சர் செல்வி கரந்தலஜே மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்