உள்ளூர் செய்திகள்

கவின்கலையில் சிறக்கலாம்

தேசத்தைப் புத்துணர்வாக்கும் கவின்கலைகள் என்பது ஓவியம், சிற்பம், வடிவமைப்பு போன்ற அழகுக்கலை சார்ந்த அனைத்தையும் உள்ளடக்கியது. கற்பனை வளத்தோடு, மிகுந்த பொறுமையோடு சிந்தனையில் உதித்ததை செயல் வடிவத்தில் அப்படியே கொண்டு வர வேண்டும். சிறப்பு வாய்ந்த கவின் கலை படிப்புகள் படித்த மாணவருக்கு மட்டுமல்ல, நாட்டு மக்களின் வாழ்க்கையையும் புத்துணர்வாக்குகிறது. பரபரப்பான சமூகத்திற்கு, கலை சார்ந்த நபர்களின் தேவைப்பாடு அதிகமாகவே இருக்கிறது. அளவில்லாத கற்பனைத் திறன் இருக்க வேண்டும். புதியவற்றை உருவாக்குவதில் ஆர்வம் வேண்டும். பொறுமையும், ஆராயும் அறிவும் அவசியம். ஓவியத்தில் அதிக ஆர்வம் இருக்க வேண்டும். கலையை நேர்மையான வருமானமாக மாற்றவும் தெரிந்திருக்க வேண்டும்.தமிழக அரசின் கலை பண்பாட்டு துறையின் கீழ் செயல்படும் அரசு கல்லுாரிகளில் கவின் கலை, கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலை படிப்புகள் வழங்கப்படுகின்றன. கல்லுாரி: அரசு கட்டடக்கலை மற்றும் சிற்ப கலை கல்லூரி, மாமல்லபுரம் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலை படிப்புகள்: பி.டெக்., - மரபு கட்டடக்கலை - டெரடிஷனல் ஆர்க்கிடெக்ச்சர் பி.எப்.ஏ., - மரபு சிற்பக்கலை - டெரடிஷனல் ஸ்கல்ப்ச்சர் பி.எப்.ஏ., - மரபு ஓவியம் மற்றும் வண்ணம் - டெரடிஷனல் டிராயிங் அண்ட் பெயின்டிங் படிப்பு காலம்: 4 ஆண்டுகள் தகுதிகள்: பி.டெக்., படிப்பிற்கு கணிதப்பாடத்துடன் கூடிய 12ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி. பி.எப்.ஏ., படிப்புகளில் சேர 12ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கல்லூரிகள்: தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற அரசு கவின் கலை கல்லுாரி -- சென்னை, கும்பகோணம், மதுரை. கவின் கலை படிப்புகள்: பேச்சுலர் ஆப் பைன் ஆர்ட்ஸ் - பி.எப்.ஏ., - 4 ஆண்டுகள் மாஸ்டர் ஆப் பைன் ஆர்ட்ஸ் - எம்.எப்.ஏ., - 2 ஆண்டுகள் பாடப்பிரிவுகள்: காட்சி தொடர்பு வடிவமைப்பு - விசுவல் கம்யூனிகேஷன் டிசைன் வண்ணக்கலை - பெயின்டிங் சிற்பக்கலை - ஸ்கல்ப்ச்சர் சுடுமண் ஆலையக வடிவமைப்பு - இண்ட்ஸ்ட்ரியல் டிசைன் இன் செராமிக் துகிலியல் ஆலையக வடிவமைப்பு - இண்ட்ஸ்ட்ரியல் டிசைன் இன் டெக்ஸ்டைல் பதிப்போவியம் - பிரிண்ட் மேக்கிங் தகுதிகள்: பி.எப்.ஏ., படிப்பில் சேர்க்கை பெற 12ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி. எம்.எப்.ஏ., படிப்பில் சேர துறை சார்ந்த பிரிவில் பி.எப்.ஏ., படித்திருக்க வேண்டும்.விபரங்களுக்கு: https://artandculture.tn.gov.in/


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்