உள்ளூர் செய்திகள்

10ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோருக்கு அமைச்சர் கடிதம்

துமகூரு: துமகூரு மாவட்டத்தின் எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களின் பெற்றோருக்கு, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கடிதம் எழுதி உள்ளார்.துமகூரு மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சி விகிதம் ஆண்டுதோறும் குறைந்து வருகிறது. இது தொடர்பாக மாவட்ட பொறுப்பு வகிக்கும் உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.இதையடுத்து, மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி., படிக்கும் மாணவர்களுக்கு, பரமேஸ்வர் கடிதம் எழுதி உள்ளார்.கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளதாவது:அன்புள்ள பெற்றோர்களே. உங்கள் பிள்ளைகள் 2024 - 25ல் எஸ்.எஸ்.எல்.சி., படிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எஸ்.எஸ்.எல்.சி., வகுப்பு என்பது தங்கள் பிள்ளை, தனது கனவு வாழ்க்கையை திட்டமிடும் காலமாகும். இதில் தேர்ச்சி பெறுவது என்பது எதிர்காலத்துக் கான நுழைவு வாயிலாகும்.உங்கள் பிள்ளைகள் பள்ளியில் எட்டு மணி நேரம் மட்டுமே செலவழித்தாலும், 16 மணி நேரம் உங்களுடன் உள்ளனர். எனவே, ஆசிரியர்கள் கற்பிக்கும் பாடங்களை நடைமுறைப்படுத்துவது பெற்றோரின் பொறுப்பாகும்.இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளார்.மாவட்ட பஞ்சாயத்து தலைமை நிர்வாக அதிகாரி பிரபு கூறுகையில், ''எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு முடிவை மேம்படுத்த, மாவட்டம் முழுதும் அனுபவ கற்றல் மற்றும் அறிவு வளப்படுத்தும் வகுப்புகள் செயல்படுத்தப்பட்டு உள்ளது.''மாணவர்களின் கற்றல் திறனுக்கு ஏற்ப, 40 நாள் தேர்ச்சி தொகுப்பு வடிவமைக்கப்பட்டு உள்ளது. இம்முறை நல்ல முடிவுகள் வரும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்