உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / எங்களிடமும் பணம் இருந்திருந்தால் ஆட்சி அமைத்திருப்போம்: தே.மு.தி.க.,

எங்களிடமும் பணம் இருந்திருந்தால் ஆட்சி அமைத்திருப்போம்: தே.மு.தி.க.,

சென்னை: காஞ்சிபுரத்தில் நடந்த தே.மு.தி.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், விஜய பிரபாகரன் பேசியதாவது: இன்றைக்கு புதிதாக துவங்கப்பட்டுள்ள கட்சிகள், 1967 மற்றும் 1977ம் ஆண்டு தேர்தலை போல, 2026 சட்டசபை தேர்தல் இருக்கப் போகிறது என்கின்றன. அப்போது, தேர்தல்களில் பணப் பட்டுவாடா இல்லை; சமீபகால தேர்தல்களில் பட்டுவாடா அதிகரித்துள்ளது. கடந்த 2005ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் களத்தில் இருந்தனர். அவர்களை மீறி தனித்து போட்டியிட்டு, அரசியல் வரலாற்றை விஜயகாந்த், தன் பக்கம் மாற்றி அமைத்தார். அதேபோல, 2011 சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வை பின்னுக்கு தள்ளி, எதிர்க்கட்சி தலைவர் ஆனார். அப்போது, வேட்டியை மடித்து கட்டி களத்தில் இறங்கி, விஜயகாந்த் வேலை பார்த்தார். அதே கெத்தோடு தே.மு.தி.க.,வினர் இருக்க வேண்டும். தி.மு.க., - அ.தி.மு.க.,வினரை போல, அதே கண்கள், அதே காது, அதே மூக்கு எல்லாம் தே.மு.தி.க.,வினருக்கும் உள்ளது. ஆனால், அக்கட்சிகளிடம் பணம் இருக்கிறது. பணம் இருந்திருந்தால், தே.மு.தி.க., ஆட்சியை பிடித்திருக்கும். தே.மு.தி.க.,விற்கு, கூட்டணியில் 25 சீட்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

அப்பாவி
ஆக 06, 2025 23:27

செல்வாக்கா இருந்த கேப்டன் ஜெயலலிதாவை நம்பி கெட்டார்.


venugopal s
ஆக 06, 2025 17:23

அப்படி என்றால் பா.ஜ.,வால் ஏன் முடியவில்லை? அவர்களிடம் இல்லாத பணமா?


Haja Kuthubdeen
ஆக 06, 2025 12:30

பணம் மட்டுமே போதாதும்மா..மக்களிடம் வேறூன்றனும்.குக்கிராமம் முதல் நகர்வரை கொடி பறக்கனும் கிளைகள் இருக்கனும்.திமுக..அதிமுக இரண்டு கட்சிக்கு மட்டும்தான் அந்த நிலை இருக்கு...


Kulandai kannan
ஆக 06, 2025 12:22

நல்ல வேளை


சாமானியன்
ஆக 06, 2025 12:01

ஒரே மனதோடு பாஜக அதிமுக கூட்டணியில் சேர்ந்தால் வெற்றி வாய்ப்பு கூடும். திமுக மாதிரி சிந்திக்காதீர்கள். நாட்டுக்கு, சொந்த மக்கட்கு மனச்சாட்சிப்படி நல்லது செய்யுங்கள். இரட்டை வேஷம் நல்லதல்ல. சில வேளைகளில் மௌனம் தர்மசங்கடத்திலிருந்து காக்கும். எல்லா பிரச்னைக்கும் கருத்து சொல்ல வேண்டிய அவசியமில்லை.


அரவழகன்
ஆக 06, 2025 11:20

ஆட்சி என்பது கடையில் விற்கும் சரக்கா..


Subburamu Krishnasamy
ஆக 06, 2025 08:09

Premalatha is of the view that money alone will bring victories in elections. Her statements show that she is not any trust with Tamizhagam voters. Then why don't she crorepathis as candidates for her party. She has no trust in our democracy


அப்பாவி
ஆக 06, 2025 07:45

பா.ஜ வோட கூட்டு வையுங்க. கார்ப்பரேட் ஃபைனான்ஸ் சப்போர்ட் கிடைக்கும்.


முக்கிய வீடியோ