வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பிரியங்கா அக்கா புத்திசாலி.. பொழச்சுக்குவாங்க
மேலும் செய்திகள்
சிவில் நீதிமன்றமா; சமாதானமா? ராமதாசுக்கு இருப்பது இரண்டே வழி
19 hour(s) ago | 6
புதுடில்லி: பார்லிமென்ட் கூட்டத்தொடர் துவங்கியதுமே எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம், கோஷங்கள் என ஆரம்பித்து விடுவர்; இதனால் , சபை நடவடிக்கைகள் முடங்கும். ஆனால், இந்த முறை முதல் நாள் அப்படி நடந்தாலும், தற்போது பார்லி., அமைதியாக நடப்பது, பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு என்ன காரணம்?இந்த ரகசியம் மூன்று பேருக்கு தான் தெரியுமாம். உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்., - எம்.பி., பிரியங்கா மற்றும் பார்லி., விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு. 'நேஷனல் ஹெரால்டு' வழக்கில் சோனியா, பிரியங்கா மற்றும் ராகுல் மீது அமலாக்கத்துறை ஏப்ரலில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துவிட்டது. இதனடிப் படையில், டில்லி போலீஸ் சமீபத்தில் இந்த மூவர் மீதும் முதல் தகவல் அறிக்கையான எப்.ஐ.ஆர்., பதிவு செய்தது. இதையடுத்து, இவர்கள் கைது செய்யப்படுவர் என சொல்லப்பட்டது.இந்நிலையில், ஒரு ரகசிய ஒப்பந்தம் போடப்பட்டதாம். 'இப்போதைக்கு உங்கள் மூவர் மீதான முதல் தகவலறிக்கையை கண்டுகொள்ளப் போவதில்லை. நீங்களும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை வைத்து பார்லி.,யை முடக்கக் கூடாது. அது குறித்து நிச்சயம் விவாதம் நடக்கும்' என, பிரியங்காவிடம் சொன்னாராம் அமித் ஷா. உடனே அதற்கு ஒப்புக்கொண்டாராம் பிரியங்கா. இதையடுத்தே, நேஷனல் ஹெரால்டு வழக்கில் பதிவான முதல் தகவலறிக்கையை டில்லி போலீஸ் கண்டுகொள்ளவில்லையாம்.'எப்படி பார்லி., அமைதியாக நடக்கிறது' என, 'இண்டி' கூ ட்டணியில் உள்ள கட்சிகளுக்கு ஒன்றுமே புரியவில்லை. தினமும் ஏதாவது செய்து, சபையை முடக்க நினைத்த இண்டி கூட்டணி, தற்போது பிளவுபட்டு நிற்கிறது. 'ஏதாவது போராட்டம் செய்ய வேண்டுமே' என்ற காரணத்தால், எதிர்க்கட்சிகள் தற்போது டில்லி காற்று மாசு விவகாரத்தை கையில் எடுத்துள்ளன.
பிரியங்கா அக்கா புத்திசாலி.. பொழச்சுக்குவாங்க
19 hour(s) ago | 6