உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முதல்வர் பிறந்த நாளையொட்டி 108 பால்குடம் ஊர்வலம்

முதல்வர் பிறந்த நாளையொட்டி 108 பால்குடம் ஊர்வலம்

வில்லியனுார்: முதல்வர் ரங்கசாமி பிறந்த நாளையொட்டி, கணுவாப்பேட்டை அங்காளம்மன் கோவிலில் 108 பால் குட ஊர்வலம் மற்றும் சிறப்பு அபிேஷகம் நடந்தது. மங்கலம் தொகுதி, கணுவாபேட்டை பகுதியில் உள்ள அங்காளம்மன் கோவிலில் முதல்வர் ரங்கசாமி பிறந்த நாளையொட்டி, 108 பால்குட ஊர்வலம் மற்றும் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மோகித் கன்ஸ்ட்ரக் ஷன் உரிமையாளர் ரவிக்குமார், பால் குடம் எடுத்த பக்தர்கள் அனைவருக்கும் மஞ்சள், மாங்கல்ய கயிறு, புடவை மற்றும் பிரசாதங்களை வழங்கினார். கோவிலில் இருந்து புறப்பட்ட பால் குட ஊர்வலம் கணுவாபேட்டை முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து அங்காளம்மனுக்கு பால் அபிஷேகம், தீபாராதனை செய்து வழிபட்டனர். நிகழ்ச்சியில் என்.ஆர்.காங்., மேற்கு மாவட்ட தலைவர் பாலமுருகன், மாநில இளைஞரணி செயலாளர் மோகன்தாஸ், மேற்கு மாவட்ட துணைத் தலைவர் நாராயணன், மேற்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் எழில் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் தங்கராசு, தேசிங்கு, ஆனந்த், சதாசிவம் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ