மேலும் செய்திகள்
மூதாட்டி தவறவிட்ட 3.5 சவரன் நகை ஒப்படைப்பு
03-Mar-2026
அரியாங்குப்பம்: பொது இடத்தில் நின்று கொண்டு பொதுமக்களை ஆபாசமாக பேசிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். தவளக்குப்பம் சந்திப்பு மதுபார் அருகே வாலிபர் ஒருவர் நின்று கொண்டு பொதுமக்களை ஆபாசமாக பேசுவதாக தவளக்குப்பம் போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. அதையடுத்து, போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். கடலுார் ராசப்பேட்டையை சேர்ந்த ராகவன், 20; என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அதே போன்று, கடலுார் சாலை இடையார்பாளையம் பகுதியில், பொதுமக்களை அவதுாறாக பேசிய தவளக்குப்பம் அடுத்த புதுக்குப்பத்தை சேர்ந்த ஜீவா, 21; என்பவரை போலீசார் கைது செய்தனர்.
03-Mar-2026