உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  சவுடாம்பிகை அம்மன் கோவில் 8ம் ஆண்டு கும்பாபிஷேக விழா 

 சவுடாம்பிகை அம்மன் கோவில் 8ம் ஆண்டு கும்பாபிஷேக விழா 

புதுச்சேரி: லாஸ்பேட்டை, வீரபத்திர சுவாமி, சவுடாம் பிகை அம்மன் கோவிலில் 8ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி, நேற்று காலை அனுக்ஞை விக்னேஷ்வர பூஜை, புண்யாவசனம், கலசஸ்தாபனம், மகா சங்கல்பம், வேதிகார்ச்சனை, ஹோம ஆரம்பம், மூல மந்திர ஜபம், மகாபூர்ணாஹூதி, மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, வீரபத்திர சுவாமிக்கும், சவுடாம்பிகை அம்மனுக்கு மகா அபிஷேகம், கடம் புறப்பாடு, கலசாபிஷேகம், 108 சங்காபிஷேகம் நடந்தது. இரவு சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. நாளை (3ம் தேதி) காலை 7 மணிக்கு சுவாமிகளுக்கு அபிஷேகமும், மாலை 6 மணிக்கு தீபாராதனையும், திருக்கார்த்திகை தீபம் ஏற்றுதல் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ