| ADDED : டிச 02, 2025 04:45 AM
புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பதவி உயர்வு பெற்ற 95 ஊழியர்களுக்கு ஆணையை துண வேந்தர் பிரகாஷ்பாபு வழங்கினார். புதுச்சேரி பல்கலைக்கழக துணை வேந்தராக பொறுப்பு ஏற்ற பிரகாஷ் பாபு, மாணவர்கள், ஆராய்ச்சி அறிஞர்கள், ஆசிரியர்கள், அதிகாரிகள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களின் நலத்தில் கவனம் செலுத்தி, பல்கலைக்கழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்து வருகிறார். நீண்டகாலமாக இருந்த வந்த பதவி உயர்வு மற்றும் நிதி மேம்பாட்டு உத்தரவுகளை குறுகிய காலத்தில் நிறைவேற்றி பதவி உயர்வு மேம்பாட்டுக் குழு மற்றும் மாற்றியமைக்கப்பட்ட உத் தரவாத தொழில் முன்னேற்றம் திட்டத்தின் கீழ் ஓய்வுபெற்ற ஊழியர்கள் உட்பட 95 ஊழியர்களுக்கு அதற்கான ஆணைகளை துணைவே ந்தர் வழங்கினார். நிகழ்ச்சியில் பேராசிரியர் தரணிக்கரசு, இயக்குநர் (கல்வி) கிளெமென்ட் சாகயரத்ஜா லூர்ட்ஸ், இயக்குநர் (கலாச்சாரம்) ரஜநீஷ் பூட்டானி, பதிவாளர் லாசர், நிதி அலுவலர் லெட் கமெண்டர் ராஜ்குமார், துணை பதிவாளர் (நிர்வாகம்) மற்றும் பல அதிகாரிகள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.