மேலும் செய்திகள்
ராமேஸ்வரம் மீனவர்கள் இருவருக்கு 2 ஆண்டு சிறை
31-Aug-2025
அரியாங்குப்பம்: வீராம்பட்டினத்தில் 1.80 கோடி ரூபாய் மதிப்பில், கட்டப்பட்டுள்ள பெட்ரோல் பங்கை, முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார். வீராம்பட்டினத்தில் பெட்ரோல் பங்கு இல்லாமல், மீனவர்கள், அப்பகுதி மக்கள், கடலுார் சாலை, மணவெளி மற்றும் மரப்பாலம் ஆகிய பெட்ரோல் பங்கிற்கு வரவேண்டி இருந்தது. மீனவர்கள், பெட்ரோல் பங்க் அமைக்க வேண்டும் என, மீன்வளத்துறையினருக்கு கோரிக்கை வைத்தனர். அதையடுத்து, மீனவர் மற்றும் மீன்வளத்துறை சார்பில், 1.80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, வீராம்பட்டினத்தில், பெட்ரோல் பங்க் கட்டி முடிக்கப்பட்டது. பெட்ரோல் பங்கை, முதல்வர் ரங்கசாமி நேற்று திறந்து வைத்தார். பாஸ்கர் எல்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். தொடர்ந்து, மீனவர்களுக்கு மானியத்துடன் கூடிய டீசல் மற்றும் பொதுமக்கள் பயன் பெறும் வகையில், பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில், அமைச்சர் லட்சுமிநாராயணன், மீனவர் மற்றும் மீனவளத்துறை துணை இயக்குனர் கவியரசன் உட்பட பலர் உடனிருந்தனர்.
31-Aug-2025