| ADDED : டிச 02, 2025 04:46 AM
புதுச்சேரி: தனியார் கம்பெனியில் ரூ. 79 லட்சம் மோசடி செய்த பொது மேலாளர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்த வருகின்றனர். வில்லியனுார் மேற்கு வீதியைச் சேர்ந்த லட்சுமிகாந்தன் 40, இவர் வில்லியனுார் தனத்துமேட்டில் இயங்கி வரும் அரோமெக் தொழிற்சாலையில் பொது மேலாளர். கம்பெனியின் நிர்வாகம், வியாபரம், கணக்கு வழக்கு, மூலப்பொருட்கள் உள்ளிட்ட அனைத்தும் இவர் மூலம்தான் வாங்கப்பட்டு செயல்பட்டு வந்தது. இவர் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் வேலையை ராஜினமா செய்தார். இந்நிலையில் கம்பெனிக்கு வெளியில் இருந்து லாரி மூலம் வரும் ஸ்கிராப், மூலப்பொருட்கள் வாங்கியதில் எடை வித்யாசம் மூலம் ரூ. 79 லட்சத்து 54 ஆயிரத்து 500 ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து மேலாண் இயக்குனர் ரவிசங்கர் புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வரு கின்றனர்.