உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / உலக ஞாபக சக்தி போட்டியில் வெற்றி பெற்ற வீரருக்கு வாழ்த்து

உலக ஞாபக சக்தி போட்டியில் வெற்றி பெற்ற வீரருக்கு வாழ்த்து

புதுச்சேரி: உலக ஞாபக சக்தி போட்டியில் பங்கேற்று முதன்மை இடத்தை பிடித்த புதுச்சேரி வீரரை பா.ஜ., நிர்வாகி வெற்றிச்செல்வம் வாழ்த்தினார். சர்வதேச ஞாபகத்திறன் அமைப்பு சார்பில், உலக ஞாபக சக்தியில் முதன்மையாக உள்ளவரை தேர்ந் தெடுக்கும் போட்டி மும்பையில் நடந்தது. இப்போட்டியில், இந்தியா உள்பட 30 நாடுகளில் இருந்து போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில், புதுச்சேரி முதலியார்பேட்டை, அனிதா நகரைச் சார்ந்த பொறியியல் கல்லுாரி மாணவர் விஷ்வா ராஜ்குமார் கலந்து கொண்டு முதன்மை இடத்தை பிடித்தார். இந்த ஆண்டிலேயே ஏற்கனவே நடைபெற்ற உலக சாதனை போட்டி இணைய வழியாக நடந்தது. மும்பையில் போட்டி நேரடியாக நடைபெற்றது. உலக சாதனை பட்டத்தை வென்ற விஷ்வா ராஜ்குமாரை பா.ஜ., நிர்வாகி வெற்றிச்செல்வம் நேரில் சென்று வாழ்த்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை