மேலும் செய்திகள்
புயல் நிவாரணம் இ.கம்யூ., கோரிக்கை
1 minutes ago
சவுடாம்பிகை அம்மன் கோவில் 8ம் ஆண்டு கும்பாபிஷேக விழா
2 minutes ago
அரசு கல்லுாரியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி
3 minutes ago
புகார் பெட்டி
3 minutes ago
புதுச்சேரி: போலி மருந்து விவகாரத்தில் மேலும், 7 இடங்களில் சோதனை நடத்த அனுமதி கோரி சி.பி.சி.ஐ.டி.,போலீசார், கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். போலி மருந்து விவகாரம் தொடர்பாக 'சன் பார்மா' நிறுவனம் அளித்த புகாரின் பேரில் சி.பி.சி.ஐ.டி, போலீசார் வழக்கு பதிந்து இருவரை கைது செய்தனர். ராஜா என்பவரை தேடிவருகின்றனர். கைது செய்யப்பட்டவர்கள் விசாரித்ததில், ஒரு கம்பெனி உள்ளிட்ட 11 இடங்களில் போலி மருந்து தயாரித்தது தெரிய வந்தது. அதன்பேரில், சி.பி.சி.ஐ.டி., போலீசார், குருமாம்பேட் மற்றும் மேட்டுப்பாளையத்தில் மூன்று குடோன்கள் மற்றும் திருபுவனை பாளையத்தில் இயங்கி வந்த ஒரு தொழிற்சாலையில் அதிரடி சோதனை நடத்தி 'சீல்' வைத்தனர். மேலும், 7 இடங்களில் சோதனை நடத்த அனுமதி கோரி சி.பி.சி.ஐ.டி., போலீசார் நேற்று மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். கோர்ட் அனுமதி கிடைத்ததும், 7 இடங்களிலும் ஒரே நேரத்தில் சோதனை நடத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
1 minutes ago
2 minutes ago
3 minutes ago
3 minutes ago