உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  போலி மருந்து விவகாரத்தை கண்டித்து 8ம் தேதி சட்டசபை முற்றுகை: தி.மு.க., முடிவு

 போலி மருந்து விவகாரத்தை கண்டித்து 8ம் தேதி சட்டசபை முற்றுகை: தி.மு.க., முடிவு

புதுச்சேரி: போலி மருந்து விவகாரத்தை கண்டித்து தி.மு.க., சார்பில், வரும் 8ம் தேதி சட்டசபை முற்றுகையிடும் பேராட்டம் நடத்தப்படும் என, எதிர்க்கட்சி தலைவர் சிவா அறிவித்துள்ளார். அவரது அறிக்கை: புதுச்சேரியில் பல நிறுவனங்களின் பெயரில் போலி மருந்துகள் தயாரித்து நாடு முழுதும் விநியோகித்து வருவதும், இது தொர்பாக சி.பி.சி.ஐ.டி., போலீசார் பல நுாறு கோடி மதிப்புள்ள போலி மருந்துகள் பறிமுதல் செய்து சீல் வைத்தனர். இந்த போலி மருந்து விநியோகத்தில் மிகப் பெரிய கூட்டு சதி நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து புகார் அளித்தும் ஆளும் என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி அரசு வழக்கம்போல் மவுனம் காக்கிறது. போலி மருந்துகளை வாங்கிய மக்கள் அதை சாப்பிடலாமா? வேண்டாமா? என்பது குறித்து அரசு எந்த விளக்கமும் அளிக்காமல் உள்ளது. போலி மருந்துகளின் உற்பத்தி கேந்திரமாக புதுச்சேரியை உருவாக்கியவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்த வலியுறுத்தியும், இதுபோன்ற மனித கொடுமைகளை அனுமதித்து வரும் புதுச்சேரி நிர்வாகி கவர்னரை கண்டித்து, தி.மு.க., சார்பில், நாளை 8ம் தேதி காலை 10:00 மணிக்கு, சட்டசபையை முற்றுகையிடும் போராட்டம் நடக்கிறது. இப்போராட்டத்தில் தி.மு.க., நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டுகிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை