மேலும் செய்திகள்
அறிவியல் கண்காட்சி
4 minutes ago
மாவட்ட அளவில் தடகள போட்டி வரும் 16ம் தேதி நடக்கிறது
6 minutes ago
ஆவண பராமரிப்பு குறித்த பயிலரங்கம்
8 minutes ago
கழிவுநீர் வாய்க்கால் பணி அமைச்சர் துவக்கி வைப்பு
9 minutes ago
புதுச்சேரி: புதுச்சேரி சுசிலாபாய் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவிகளுக்காக 'நமது சுற்றுச்சூழல்'என்ற தலைப்பில் பள்ளி அளவிலான அறிவியல் 2 நாள் கருத்தரங்கம் நடந்தது. பள்ளி துணை முதல்வர் ராஜவேல்சுகந்தி தலைமை தாங்கினார். மாணவி நஸீஹா வரவேற்றார். ஓய்வு பெற்ற மாநில பயிற்சி மைய ஓ.எஸ்.டி., டாக்டர்கிருஷ்ணன் குத்து விளக்கேற்றி கருத்தரங்கை தொடங்கி வைத்து சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை விளக்கி பேசினார். பல்வேறு மாணவியர் குழுவினர் சூழலமைப்பு, உணவுக் சங்கிலி, உணவு வலை ஊட்ட அடுக்குகள், ஓசோன் அடுக்கு பாதுகாப்பு மற்றும் திடக்கழிவு மேலாண்மைமுறைகள் உள்பட சுற்றுச்சூழல் தொடர்பான முக்கிய அறிவியல் தலைப்புகள் குறித்து கலந்துரையாடினர். மாணவிகள் புகழ்பெற்ற அறிவியலாளர்கள் பெயர்களில் செயல்பட்டு தங்கள் குழுவின் திறமையை வெளிப்படுத்தினர். கருத்தரங்கில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர் மற்றும் பள்ளி துணை முதல்வர் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.இதற்கான ஏற்பாடுகளை் ஆசிரியர் ஜார்ஜ் பெர்னான்டஸ் மற்றும் ஆசிரியர்கள்செய்திருந்தனர். மாணவி நித்யா நன்றி கூறினார்.
4 minutes ago
6 minutes ago
8 minutes ago
9 minutes ago