உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  போலி மருந்து விவகாரத்தை சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் மாஜி முதல்வர் நாராயணசாமி பேட்டி

 போலி மருந்து விவகாரத்தை சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் மாஜி முதல்வர் நாராயணசாமி பேட்டி

புதுச்சேரி: போலி மருந்து விவகாரத்தில் ஒட்டு மொத்த அரசு நிர்வாகம் செயலிழந்துள்ளதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: போலி மருந்து விவகாரத்தில் கம்பெனி நடத்திய ராஜா இதுவரை கைது செய்யவில்லை. அவரது கம்பெனியை ஆய்வு செய்த போது பல கோடி ரூபாய் மதிப்புள்ள மருந்துகள், இயந்திரங்கள், லேபிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த கம்பெனி தொழில்துறை, உள்ளாட்சி, மாசு கட்டுப்பாட்டு துறை, தீயணைப்பு என எந்த துறையின் அனுமதியும் பெறாமல் கடந்த 4 ஆண்டாக இயங்கி வந்துள்ளது. இதில் மிகப்பெரிய அரசியல் பின்னணி உள்ளது. அரசியல்வாதிகள் ஆதரவு இல்லாமல் இது போன்ற தொழிற்சாலைகள் நடைபெறாது. இந்த துறை முதல்வர் ரங்கசாமியிடம் உள்ளது. இந்த விஷயத்தில் ஒட்டுமொத்த அரசு துறையும் செயலிழந்துள்ளது. இந்த ராஜா, ஆளும் கூட்டணியில் உள்ள பா.ஜ.,வில் முக்கிய பொறுப்பில் உள்ளவரின் அரவணைப்பில் உள்ளார். மேலும், சபையின் நாயருக்கு நெருக்கமானவர். தினமும் அவரது அறையில் தான் உள்ளார். அதனால்தான் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக அமலாக்க துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும். இல்லை என்றால், காங்., சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம். இந்த போலி மருந்து விவகாரத்திற்கு, இத்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.

ரூ.10 ஆயிரம் மழை நிவாரணம்

தொடர் மழையால் பாதித்த நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரமும், இடிந்த வீடுகளுக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். மேலும், மழை நிவாரணமாக சிவப்பு ரேஷன் கார்டிற்கு ரூ.10 ஆயிரமும், மஞ்சள் ரேஷன் ககார்டிற்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ