மேலும் செய்திகள்
இயற்கை பாரம்பரிய உணவுத் திருவிழா
8 minutes ago
புதுச்சேரி: அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி, அரசு சார்பில், மரியாதை செலுத்தப்பட்டது. புதுச்சேரி சட்டசபை எதிரே உள்ள அம்பேத்கர் சிலைக்கு, கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், சபாநாயகர் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ.,க்கள் பாஸ்கர், ரமேஷ், லட்சுமிகாந்தன், கல்யாணசுந்தரம், சாய்சரவணன்குமார் உட்பட பலர் உடனிருந்தனர். தொடர்ந்து, கடற்கரை சாலையில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில், அவரது சிலைக்கு கவர்னர், முதல்வர் உள்ளிட்ட அனைவரும் மரியாதை செலுத்தினர். என்.ஆர். காங்.,: என்.ஆர். காங்., தலைமை அலுவலகத்தில் அம்பேத்கர் படத்திற்கு, முதல்வர் ரங்கசாமி தலைமையில், பொதுச்செயலாளர் ஜெயபால் உட்பட பலர் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்து தலைமையில் மரியாதை செலுத்தினர். அதில், சப்தகிரி அறக்கட்டளை நிர்வாகிகள் பங்கேற்றனர். பா.ஜ.,: மாநில பா.ஜ., தலைவர் ராமலிங்கம் தலைமையில், அமைச்சர் நமச்சிவாயம், சாய்சரவணன்குமார் தீப்பாய்ந்தான் எம்.எல்.ஏ., உட்பட பலர் மரியாதை செலுத்தினர். தி.மு.க .,:எதிர்க்கட்சி தலைவர் சிவா தலைமையில், தி.மு.க., மாநில அவைத்தலைவர் சிவக்குமார், துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி, பொருளாளர் செந்தில்குமார், சம்பத் எம்.எல்.ஏ., உட்பட பலர் மரியாதை செலுத்தினர். காங்.,: காங்., சார்பில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி., சீனியர் துணை தலைவர் தேவதாஸ், முன்னாள் அமைச்சர்கள் ஷாஜகான், கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அனந்தராமன், கார்த்திகேயன்மரியாதை செலுத்தினர். அ.தி.மு.க.,: மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில், அவைத்தலைவர் அன்பானந்தம், முன்னாள் எம்.எல்.ஏ., ராஜாராமன் மரியாதை செலுத்தினர். கம்யூ.,: இந்திய கம்யூ., மாநில செயலாளர் சலீம், நிர்வாக குழு உறுப்பினர் கலைநாதன் மற்றும் ம.கம்யூ., நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். த.வெ.க.,: புதுச்சேரி த.வெ.க., சார்பில், பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் நிர்வாகிகள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.மேலும், நமது மக்கள் கழகம் சார்பில், நேரு எம்.எல்.ஏ.,புதுச்சேரி வக்கீல் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகள் மரியாதை செலுத்தினர்.
8 minutes ago