உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பசியில்லா உழவர்கரை திட்டம் மூன்றாம் ஆண்டு துவக்க விழா

 பசியில்லா உழவர்கரை திட்டம் மூன்றாம் ஆண்டு துவக்க விழா

புதுச்சேரி: உழவர்கரை தொகுதியில் பசி இல்லா உழவர்கரை திட்டத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு சமூக சேவகர் வழக்கறிஞர் சசிபாலன் உணவு வழங்கினார். உழவர்கரை தொகுதியின் வழக்கறிஞர் சசிபாலனின் ஏற்பாட்டில், 'பசியில்லா உழவர்கரை திட்டம்' மூன்றாம் ஆண்டு துவக்க விழா நடந்தது. விழாவில் கலந்து கொண்ட சமூக சேவகர் வழக்கறிஞர் சசிபாலன் உணவு வழங்கி கூறியதாவது: உழவர்கரை தொகுதியில் கடந்த 2023ம் ஆண்டு பசியில்லா உழவர்கரை திட்டம் என அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் நோக்கம் உழவர்கரை தொகுதியில் ஒருவர் கூட பசியோடும், உணவு அருந்தாமல் உறங்கக்கூடாது என்ற மனிதநேய கொள்கையின் அடிப்படையில் அமைந்தது. ஆரம்பத்தில் பொதுமக்கள் எப்போதும் தொடர்பு கொள்ளக்கூடிய தனிப்பட்ட தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டது. உணவு தேவைப்படுபவர்கள் அந்த எண்ணுக்கு அழைத்தால், அவர்களின் வீட்டு வாசலில் நேரடியாக உணவு வழங்கும் சேவை தொடர்ந்து செயல்பட்டு வந்தது. தொகுதி மக்களின் நலன் கருதி இத்திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டது. கடந்தாண்டு அக்டோபர் 4ம் தேதி முதல், இந்த திட்டம், உழவர்க ரை தொகுதியின் ஏழு முக்கிய இடங்களில், தினமும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை உணவு வழங்கும் சேவை தொடங்கப்பட்டது. இதன் மூலம், உணவு தேவைப்படுவோருக்காக எளிதில் இந்த சேவை சென்றடைந்தது. உழவர்கரை தொகுதி முழுமையாக பயன் பெறும் விதமாக இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை