உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  புதிய பஸ் ஸ்டாண்டில் ஆய்வு: போக்குவரத்து ஆணையர் அதிரடி

 புதிய பஸ் ஸ்டாண்டில் ஆய்வு: போக்குவரத்து ஆணையர் அதிரடி

புதுச்சேரி: புதுச்சேரி பஸ் ஸ்டாண்டில் உள்ளூர் பஸ்களின் இயக்கம் குறித்து போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு மேற்கெொண்டனர். ​பயணிகளின் பாதுகாப்பு, சரியான நேரம் சேவையை உறுதி செய்யும் நோக்கில், போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் உத்தரவின்பேரில், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பிரபாகர் ராவ் தலைமையில், நகராட்சி ஆணையர் கந்தசாமி, கண்காணிப்பு ​உதவி மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சந்தோஷ், மணிகண்டன் மற்றும் அமலாக்க உதவியாளர்கள், புதுச்சேரி பஸ் ஸ்டாண்டில் உள்ளூர் வழித்தட பஸ்கள், அனுமதி பெற்ற வழித்தடம், நேர அட்டவணையை கடைபிடிக்கின்றனரா என நேற்று ஆய்வு செய்தனர். ஆய்வில், பஸ்களில் அனுமதிச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள வருகை மற்றும் புறப்பாடு நேரங்களை கட்டாயம் கடைபிடிப்பது, இ - சலான் வழங்குதல், பயணிகளுக்கு கட்டண விவரம், நேர அட்டவணை விளக்கப்பட்டது. இதனை கடைபிடிக்க தவறிய 9 பஸ்களுக்கு இ - சலான்கள் வழங்கப் பட்டது. இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலகர் கூறுகையில், 'ஒழுங்குமுறையை கட்டாயமாக்குவதற்கும், விதிமுறைகளை தீவிரமாக கடைப்பிடிப்பதற்கும், இந்தச் சோதனைகள் தொடர்ந்து நடைபெறும். ​கேமராக்கள், தானியங்கி எண் தகடு, ​பஸ்களின் வருகை, புறப்பாடு நேரங்களை துல்லியமாகவும், தானியங்கியாவும் கண்காணிக்கும். இதன் மூலம் பிழைகள் கு றைக்கப்பட்டு, அனைத்துப் போக்குவரத்து வாகனங்களும் ஒதுக்கப்பட்ட வழித்தடம் மற்றும் நேர அட்டவணையை சரியாகக் கடைப்பிடிப்பது உறுதி செய்யப்படும்' என தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை