மேலும் செய்திகள்
அரசு கல்லுாரியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி
1 minutes ago
புகார் பெட்டி
1 minutes ago
புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தில் சங்கரதாஸ் சுவாமிகள் விழா
1 minutes ago
போதையில் தகராறு செய்த 2 பேர் கைது
2 minutes ago
புதுச்சேரி: தொழிற்சாலைகள் சூரிய மின் உற்பத்தி மையங்களை அமைப்பதன் மூலம் 16 சதவிகிதம் காற்று மாசை குறைக்கலாம் என மாசுக் கட்டுப்பாட்டு குழும உறுப்பினர் செயலர் ரமேஷ் பேசினார். இந்திய தொழில் கூட்டமைப்பு புதுச்சேரி கிளை சார்பில் பருவநிலை மாற்றத்தின் விளைவுகளை எதிரிகொள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளின் தயார்நிலை என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் நடந்தது. கூட்டமைப்பின் தலைவர் சமீர் கம்ரா வரவேற்றார். ஆரோவில், சுற்றுச்சூழல் ஆலோசகர் டொய்னி மேகன் நோக்கவுரையாற்றினார். புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு குழுமத்தின் உறுப்பினர் செயலர் ரமேஷ் பேசியதாவது: குறு, சிறு, நடுத்தர தொழிற்சாலைகள் மாநிலத்தின் முதுகெலும்பாகும். புதுச்சேரியில் உள்ள தொழிற்சாலைகள் 90 சதவிகிதம் இவ்வகையை சாரும். வெள்ளம், புயல், வெப்ப அலைகள் ஆகிய மூன்று பருவநிலை மாற்றத்தால் உருவாகும் சீற்றத்தால் அதிகம் பாதிக்கப்படுவது இத்தகைய தொழிற்சலைகள்தான். இவற்றை எதிர்கொள்ள, தொழிற்சாலைகளை அமைப்பதற்கு முன் தகுதி வாய்ந்த இடங்களை தேர்வு செய்ய வேண்டும். வெள்ளப்படுகை, ஆற்றுப்பகுதிகளில் தொழிற்சாலைகளை அமைக்ககூடாது. தொழிற்சாலைகளை அமைக்கும்பொழுது அருகிலுள்ள ஓடைகள், வாய்கால்கள், கால்வாய்களை மாற்றக்கூடாது. இவைகள் வெள்ளப்பெருக்கை வெளியேற்றும் வழித்தடங்களாகும். பருவநிலை வேகமாக மாறிவரும் மாற்றத்தால் காலநிலை காரணத்தால் சரியாக கணிக்க முடியவில்லை. தொழிற்சாலைகள் சூரிய மின் உற்பத்தி மையங்களை அமைப்பதன் மூலம், ஜெனரேட்டர் உபயோக்கத்தை தவிர்க்கலாம். இதனால் 16 சதவிகிதம் காற்று மாசை குறைக்கலாம். தொழிற்சாலையை சுற்றி தேக்கு மரங்களை நடுவதன்மூலம் புயல்தாக்கம், வெப்பகாற்றால் ஏற்படும் தீவிபத்தை குறைக்கலாம். தொழிற்பேட்டைக்கு அருகில் பூங்காக்களை உருவாக்குவதன்மூலம் தொழிலாளர்களின் மன அழுத்தத்தை போக்கலாம். இவ்வாறு அவர் பேசினார். கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிராங்க்களின் ஒருங்கிணைத்தார்.
1 minutes ago
1 minutes ago
1 minutes ago
2 minutes ago