உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ஜிப்மரில் நாளை ஓ.பி., பிரிவு இயங்காது

 ஜிப்மரில் நாளை ஓ.பி., பிரிவு இயங்காது

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில், நாளை (31ம் தேதி) புற நோயாளிகள் பிரிவு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஜிப்மர் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; மத்திய அரசு விடுமுறை தினமான நாளை (31ம் தேதி) மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, ஜிப்மர் புறநோயாளிகள் பிரிவு இயங்காது. எனவே, அன்றைய தினம் நோயாளிகள் வெளிப்புற சிகிச்சை பிரிவுக்கு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எனினும் அவசரபிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி