உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  நகராட்சி ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்

 நகராட்சி ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்

கோட்டக்குப்பம்: கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டக்குப்பம் நகராட்சி அலுவலக வளாகத்தில் ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோட்டக்குப்பம் நகராட்சியில் பணிபுரியும் 80க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் கடந்த 4 ஆண்டுகளாக தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு பெண் ஊழியர்களுக்கு 375 ரூபாயும், ஆண் ஊழியர்களுக்கு 450 ரூபாயும் வழங்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்காமல் அலை கழிப்பதாகவும், தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட இ.எஸ்.ஐ., மற்றும் வைப்பு நிதிகளை ஒப்பந்ததாரர் செலுத்தாமல் இருந்துள்ளனர். எனவே நிலுவையில் உள்ள வைப்பு நிதியை உடனே செலுத்த வேன்டும். சம்பள உயர்வு வழங்க வேண்டும் எனக்கோரி நேற்று நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை