உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  கனமழையால் பாதித்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க ஓம்சக்தி சேகர் கோரிக்கை

 கனமழையால் பாதித்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க ஓம்சக்தி சேகர் கோரிக்கை

புதுச்சேரி: கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களை உடனடியாக கணக்கிட்டு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அ.தி.மு.க. உரிமை மீட்டு குழு வலியுருத்தி உள்ளது. இது குறித்து அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் வெளியிட்டுள்ள அறிக்கை: டிட்வா புயலின் தாக்கம் காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கி நெற்பயிர்கள் அழுகும் நிலையில் உள்ளன. பருத்தி உள்ளிட்ட பிற பயிர்களும் கடுமையாக சேதமடைந்துள்ளன. சுமார் 5000 ஹெக்டேர் வரை விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால், விவசாயிகள் பெரிய நெருக்கடியில் உள்ளனர். நிலங்களில் தேங்கியுள்ள தண்ணீரை மிக விரைவாக வெளியேற்ற வேண்டுமென அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். வேளாண் அமைச்சர் உடனடியாக காரைக்கால் மாவட்டம் சென்று விவசாயிகளை நேரில் சந்தித்து ஆறுதல் வழங்க வேண்டும். சேதங்களை முழுமை யாக கணக்கெடுத்து, தகுதியான விவசாயிகளுக்கு அவசர நிவாரணம் மற்றும் இழப்பீடு வழங்கவேண்டும். அதேபோல், புதுவை மாநிலத்தின் பிற பகுதிகளிலும் கனமழை காரண மாக விளைநிலங்கள் சேதமடைந்திருந்தால், அதன் கணக்கெடுப்பையும் விரை வாக செய்து, உரிய நடவடிக்கைகளை மேற் கொள்ள முதல்வர், வேளாண் துறைக்கு தக்க உத்தரவை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ