உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் அரசியல் தலையீடு கூடாது

 வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் அரசியல் தலையீடு கூடாது

புதுச்சேரி: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணியில் அரசியல் தலையீடு கூடாது என, காங்., ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் வலியுறுத்தியுள்ளார். அவரது அறிக்கை; புதுச்சேரியில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் வெளிப்படையற்ற முறையிலும், அரசியல் நோக்கத்துடன் நடைமுறைப்படுத்தப்படுகிறது. உண்மையான வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டு, தகுதியற்றவர்களின் பெயர் சேர்க்கப்படுவதால் அரசியலில் தேர்தல் பலன்களை பெற சிலர் முயற்சிக்கின்றனர். இத்தகைய செயல்கள் புதுச்சேரி மக்களின் ஜனநாயக உரிமைகள், அவர்களின் நம்பிக்கையும் பாதிக்கும். உடனடியாக வெளிப்படைத்தன்மை,பாகுபாடற்ற நடைமுறைகளை தேர்ல் ஆணையம் உறுதிப்படுத்த வேண்டும். வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்வதில் அரசியல் தலையீடு கூடாது. வாக்காளர் பட்டியலை திரித்து மாற்றுவது, மக்களின் உண்மையான குரலை அடக்குவது போன்ற எந்த முயற்சியையும் காங்கிரஸ் கடுமையாக எதிர்த்து போராடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை