உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  தெரு நாய்களுக்கு விரைவில் கருத்தடை : புதுச்சேரி நகராட்சி தீவிரம்

 தெரு நாய்களுக்கு விரைவில் கருத்தடை : புதுச்சேரி நகராட்சி தீவிரம்

புதுச்சேரி: புதுச்சேரியில் பெரும் பிரச்னையாக விளங்கி வரும் தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை தடுப்பதற்காக புதுச்சேரி நகராட்சி சார்பில் நாய் கருத்தடை மையம் விரைவில் திறக்கப்படவுள்ளது. . நாடு முழுவதும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பெருகி தெரு நாய்கள் பிரச்னையால் ஐக்கோர்ட் வரும் 13ஆம் தேதிக்குள் அனைத்து மாநில அரசுகளும் தெரு நாய்களால் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வுகாண விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது. அதைத்தொடர்ந்து நகரப் பகுதியில் தாறுமாறாக பெருகி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு முதலில் கருத்தடை செய்வதற்கு புதுச்சேரி நகராட்சி சார்பில் தாவரவியல் பூங்கா அருகில் உழவர் சந்தை எதிரில் உள்ள பஸ் நிலைய வளாகத்தில் கருத்தடை மையம் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த கருத்தடை மையத்தில் நாள் ஒன்றுக்கு 10 நாய்களுக்கு கருத்தடை செய்து . மையத்தில் உள்ள 7அறைகளில் 70 நாய்கள் வரை பராமரிக்கப்படும். பின்னர் அது எங்கு பிடிக்கப்பட்டதோ அங்கு கொண்டு விடப்படும். இந்த தெருநாய்களை பிடித்தல், கருத்தடை செய்தல், பராமரித்து மீண்டும் விடுதல் வரை நாய் ஒன்றுக்கு தலா ரூ.1,650 வரை நகராட்சி சார்பில் இந்த பணிகளை செய்ய உள்ள தன்னார்வ தொண்டு அமைப்பினருக்கு வழங்கப்படுகிறது. நாய் பிடிக்கும் பணிகளை மேற்கொள்ள தமிழகத்தைச் சேர்ந்த நாய் பிடிப்பாளர்கள் வருகின்றனர். அதைத்தொடர்ந்து நாய் ஷெல்டர் தயாராகி உள்ளது. மேலும் தெரு நாய்களை முழுவதுமாக அடைத்து வைத்து பராமரிக்க முருங்கபாக்கம் அருகில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத ஒதுக்கு புறமான இடத்தில் நாய் ஷெல்டர் விரைவில் அமைக்கப்படுகிறது இதற்கான பணிகளையும் நகராட்சி அதிகாரிகள் வேகமாக செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை