மேலும் செய்திகள்
அரசு பள்ளி கட்டடம் புனரமைக்கும் பணி
06-Dec-2025
தினமலர் - பட்டம் வினாடி வினா போட்டி
06-Dec-2025
பதவி உயர்வு பெற்றவர்களுக்கு ஆணை வழங்கல்
06-Dec-2025
நெ ட்டப்பாக்கம், மடுகரை, சூரமங்கலம் கிராமங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் இயங்கி வருகின்றன. இந்த கிராமங்கள் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி. இப்பகுதி மக்கள் காலை நேரத்தில் விவசாய கூலி வேலைக்கு சென்று விடுவதால், பெரும்பாலும் மதியம் அல்லது மாலை நேரத்தில் தான் குழந்தைகளை சிகிச்சைக்காக ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அழைத்து செல்வர். ஆனால், இந்த மையங்களில் காலை 8:00 மணி முதல் காலை 10:30 மணி வரை மட்டுமே டாக்டர் சிகிச்சை அளிப்பர். அதன் பிறகு, செவிலியர்கள் தான் சிகிச்சைக்கு வரும் குழந்தைகளுக்கு மருந்து, மாத்திரை கொடுத்து மறுநாள் டாக்டரை வந்து பார்க்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர். குழந்தை சற்று மோசமான நிலையில் இருந்தால், ஆம்புலன்ஸ் மூலம் புதுச்சேரி குழந்தைகள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர். ஆம்புலன்ஸ் ஒரு முறை புதுச்சேரி மருத்துவமனைக்கு வந்து செல்ல ஒன்றரை முதல் 2 மணி நேரமாகும். அதற்குள் அடுத்த குழந்தை சிகிச்சைக்கு வந்தால், புதுச்சேரிக்கு அனுப்புவதில் பிரச்னை ஏற்படும். இதுதான் கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களின் நிலைமை. நகர பகுதியில் அரசு பொதுமருத்துவமனை, ஜிப்மர், கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைகள் உள்ளன. இதுதவிர தடுக்கி விழுந்தால் ஏராளமான தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகள் உள்ளன. அதுபோன்ற வசதி கிராமங்களில் கிடையாது. இவ்வளவு மருத்துவ வசதிகள் கொண்ட நகர பகுதி ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலை, மதியம், இரவு என, 3 ஷிப்டுகளில் டாக்டர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். எவ்வித அடிப்படை மருத்துவ வசதியும் கிடைக்காத மாநிலத்தின் கடை கோடியில் உள்ள கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலை 8:00 மணி முதல் 10:30 மணி வரை மட்டுமே டாக்டரை பார்க்க முடியும். அதன்பிறகு, ஏதேனும் அடிப்பட்டு சிகிச்சைக்கு வருவோர், திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு வருவோருக்கு சிகிச்சை அளிக்க டாக்டர்கள் இருப்பது கிடையாது. ஆம்புலன்ஸ் மூலம் புதுச்சேரி அரசு மருத்துவமனை அல்லது மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பர். இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் பலர் வரும் வழியிலே பரிதாபமாக இறப்பது தொடர் கதையாக உள்ளது. நேற்று நடந்த குழந்தை இறப்பு சம்பவத்திலும், டாக்டர்கள் இல்லாததால், என்.ஆர்.எச்.எம்., செவிலியரே குழந்தைக்கு சிகிச்சை அளித்துள்ளார். குழந்தை மோசமான நிலைக்கு சென்றதால், மேல் சிகிச்சை அளிக்க முடியாமல் குழந்தை பரிதாபமாக இறந்துள்ளது. எனவே, மருத்துவ வசதிகள் கிடைக்க பெறாத கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலை, மதியம், இரவு என, 3 ஷிப்ட்களில், ஏழை மக்களுக்கு சிகிச்சை அளிக்க டாக்டர்கள் நியமிக்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
06-Dec-2025
06-Dec-2025
06-Dec-2025