உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / நியூசிலாந்து-இங்கிலாந்து மோதல்* மழையால் போட்டி ரத்து

நியூசிலாந்து-இங்கிலாந்து மோதல்* மழையால் போட்டி ரத்து

கிறைஸ்ட்சர்ச்: நியூசிலாந்து சென்றுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி நேற்று கிறைஸ்ட்சர்ச் நகரில் நடந்தது. 'டாஸ்' வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் மிட்சல் சான்ட்னர், பீல்டிங் தேர்வு செய்தார். இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் (3), பட்லர் (29) ஜோடி சுமார் துவக்கம் தந்தது. பெத்தெல் 15 ரன் மட்டும் எடுக்க, கேப்டன் ஹாரி புரூக் 20 ரன் எடுத்து, வெளியேறினார். ஜோர்டான் காச் (16) நிலைக்கவில்லை. சாம் கர்ரான் 49 ரன் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து அணி 20 ஓவரில் 153/6 ரன் எடுத்தது. இதன் பின் மழை தொடர, போட்டி ரத்து செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !